திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கைது ஒருவர் தப்பி சென்றுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்ளனர். இவர்களோடு, 2019ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில், சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்கேரியா நாட்டை சேர்ந்த இல்லியானோ அட்டர்கெள மார்க்கோவ் (55) என்பவரும் இருந்தார்.
சிறப்பு முகாமில் உள்ளவர்களை வழக்கம் போல் போலீசார் இன்று காலை கணக்கெடுத்தனர். அப்போது மார்க்கோவ் மட்டும் இல்லை. சிறப்பு முகாமில் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இல்லை என்பதால் தப்பியதை உறுதி செய்தனர். மார்க்கோவ் மாயமானது குறித்து திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மார்க்கோவ் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கம்பியை வளைத்து, ஜன்னலின் வழியே ஏறிக்குதித்து தப்பியதும் தெரிய வந்துள்ளது.
தகவலறிந்த, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண், துணை ஆணையர் சக்திவேல், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கண்காணிப்பாளர் ஆனந்தன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர்.ம்மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து, அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
தப்பிச் சென்ற பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம் என்று மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்ட திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் இருந்து, வெளிநாட்டு கைதி ஒருவர் தப்பியோடியது, சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே சினிமா பாணியில் தப்பிய நைஜீரியா கைதி
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டைச் சேர்ந்தவர் தப்பிச் செல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீபன் பால் அப்புச்சி (வயது 32) என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில், சென்னை பெருநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க: தரக்குறைவான பதிவு - படிக்காமல் ஃபார்வேர்டு செய்வீர்களா? எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி
இவர், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி அதிகாலை, தண்ணீர் லாரியின் அடியில் தொங்கியபடி, தப்பிச் சென்றார். இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருச்சி தனிப்படை போலீசார், ராஜஸ்தான், மும்பை என வடமாநிலங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில், 2019 செப்டம்பர் 9ம் தேதி, டெல்லியில் வைத்து ஸ்டீபன் பாலை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.