திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியில் சுற்றிய லேப் டாப் இளைஞர் - ஆர்.ஓ -வை நேரில் சந்தித்து புகார் அளித்த கே.என்.நேரு

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதியில் சுற்றிய லேப் டாப் இளைஞர்  - ஆர்.ஓ -வை நேரில் சந்தித்து புகார் அளித்த கே.என்.நேரு

கே.என்.நேரு

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதி அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

  • Share this:
திருச்சியில் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில்,  லேப் டாப்புடன் ஒரு இளைஞர் சுற்றியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதன்படி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இதில், திருச்சி மேற்கு தொகுதி மின்னணு  வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' அருகே மடிக் கணினியுடன் ( லேப் டாப்ப) ஒரு இளைஞர் சுற்றியதால், அவரை சூழ்ந்து கொண்டு தி.மு.க முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அனுமதியின்றி லேப் டாப் கொண்டு வந்ததால் சந்தேகம அடைந்ததாக  தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர்.

மடிக்கணினியுடன் சுற்றிய நபர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு வந்த ஊழியர் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கமளித்தனர். இந்நிலையில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என் நேரு, தேர்தல் நடத்தும் அலுவலர் (R O) விஸ்வநாதனை நேரில் சந்தித்து, இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, ‘திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிக்கடி சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடக்கின்றன.ஏற்கனவே, சந்தேகப்படும்படி மொபைல் டாய்லெட் வாகனம் வந்தது. அதற்கு பின்னர் ட்ரோன் ஒன்றும் பறந்தது.
இப்போது, லேப் டாப்புடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கேட்டால், சிசிடிவி பொருத்த வந்ததாக சொல்கிறார்கள். இந்த மையத்தில் மட்டும் அடிக்கடி இது போல் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

'வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து நம்பிக்கை உள்ளதா?' என்று நமது செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நம்பித் தானே ஆகனும்? வேற வழி.." என்று விரக்தியுடன் விடைபெற்றார்.

*ஆர்.ஓ., விளக்கம்*
புகார் தந்த கே.என்.நேருவிடம், ஆர்.ஓ., விஸ்வநாதன், 'நீங்கள் நினைப்பதை போல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை  'ஹேக்' செய்ய முடியாது. தொடர் கண்காணிப்பில் உள்ளன. சந்தேகமாக இருந்தால்  அங்கேயே ஒரு மாதிரி  இயந்திரம்  உள்ளது. டெமோ செய்து காட்டுகிறோம் என்றார். "என்னமோ.. பார்த்து பண்ணுங்க சார்.." என்று சொல்லிபடியே நேரு அங்கிருந்து கிளம்பினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பகுதி அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
Published by:Ramprasath H
First published: