• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்.. அதிகரித்த திருட்டுகள் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்.. அதிகரித்த திருட்டுகள் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

திருச்சி திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகள்

திருச்சி திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகள்

நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி நோட்டமிடும் மர்மநபர்கள் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

  • Share this:
    திருச்சியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலைஉயர்ந்த இருசக்கரவாகனங்கள், கார்கள் திருடுப்போனதாக, காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

    திருச்சி மாநகரப்பகுதிகளில் வணிகவளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தி வைத்துச்செல்லும் வாகனங்கள் திருடப்படுவது மாநகர் மற்றும் புறநகரில் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனிடையே திருச்சி சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெரு, கோனார் தெரு, பாண்டியன்தெரு, இளங்கோ உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், விலையுர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடுபோகும் சம்பவமும் தற்போது அரங்கேறி வருகிறது.

    அந்தவகையில் ஜெய்லானியா தெரு மற்றும் பாண்டியன் தெரு பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த புல்லட் மற்றும் கேடிஎம் இருசக்கர வாகனங்களும், கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் சைக்கிளும் திருடுபோனது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோது கல்லூரி மாணவர்கள் போன்ற 2 நபர்கள் இரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி அப்பகுதியை நோட்டமிட்டு செல்கின்றனர். அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்தபின்னர் வீட்டின் முன்பு மூடியபடி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திருடிச்செல்வது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து சிசிடிவி கேமரா வீடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் இன்று கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஏற்கனவே அப்பகுதியில் இருசக்கரவாகனங்கள் திருடுபோவது வாடிக்கையாக நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்: கதிரவன் ( திருச்சி)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: