Beast | 'பீஸ்ட்' ரிலீஸ்... விஜய் ரசிகரின் தரமான சம்பவம்..
Beast | 'பீஸ்ட்' ரிலீஸ்... விஜய் ரசிகரின் தரமான சம்பவம்..
பீஸ்ட்
Vijay |முன்னதாக, திரையரங்க வாயிலில் அமர்ந்து முதியவர்கள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருடனும் செல்பி எடுத்துக் கொண்டனர். நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்கும் காப்பகவாசிகளை, விஜய் ரசிகர் ஒருவர் விஜய் படம் பார்க்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் நேற்று வெளியான பீஸ்ட் திரைப்படத்தை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பார்த்து ரசிக்கும்படி செய்த திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகரின் செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் மன்றம் முன்னாள் தலைவர் ஆர். கே. ராஜா, திருச்சி கங்காரு காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள் என 50க்கும் மேற்பட்டோரை பீஸ்ட் திரைப்படம் பார்க்க அழைத்து வந்தார். அவர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கிய ராஜா, பட இடைவேளையின்போது டீ, காபி, பாப்கார்ன், ஐஸ்கீரிம் வழங்கியும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
முன்னதாக, திரையரங்க வாயிலில் அமர்ந்து முதியவர்கள், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருடனும் செல்பி எடுத்துக் கொண்டனர். நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்கும் காப்பகவாசிகளை, விஜய் ரசிகர் ஒருவர் விஜய் படம் பார்க்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடுவது படக்குழு உறுதியாக இருந்த நிலையில் கன்னடத்தில் உருவாகி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ள கேஜிஎப் திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதால் ஒருநாள் முன்னதாக விஜயின் திரைப்படம் வெளியானது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.