குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு: திருச்சியை சேர்ந்தவர்களுக்கு நாசா சான்று!

குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு

திருச்சியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குறுங்கோள்களுக்கும் BBM2101,  BBM2102, BBM2103 எனத் தற்காலிக பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் இந்த குறுங்கோள்களின்  அளவு, சுற்றுப்பாதை, பூமியைத் தாக்குமா? உள்ளிட்டவை உறுதி செய்யப்படும்.

  • Share this:
திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் பாலா பாரதியும், கல்லூரி மாணவர் ஆழி முகிலனும் இணைந்து மூன்று குறுங்கோள்களைக் (Asteroids) கண்டுபிடித்துள்ளனர். இதை நாசா அங்கீகரித்து சான்றளித்துள்ளது. 

வான்வெளியில் செவ்வாய்,  வியாழன்  கோள்களுக்கு இடையில்  பாறை போன்ற பல,   சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றை குறுங்கோள்கள் ( Asteroids) என்கிறோம். அளவு தன்மைக்கேற்பவும்  பூமியை நோக்கி வரும் போது விண்கற்கள், எரிநட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன.குறுங்கோள்கள் சிறிய கற்களிலிருந்து பிரம்மாண்ட மலையளவு வரை உள்ளன.

இவற்றில் பூமிக்கு அருகிலிருந்து இயங்கும் குறுங்கோள்களும் (Near Earth Objects) உண்டு. அவை பூமியின் சுற்று வட்டப்பாதையைக் குறிக்கிடும்போது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகின்றன. அளவில் சிறிதாக இருப்பவை வளிமண்டலத்திலுள்ள காற்றின் உராய்வினால் எரிந்துவிடுகின்றன. ஆனால், அவை அளவில் பெரிதாக அமைந்துவிட்டாலோ முழுவதும் எரிவற்கு முன்பே பூமியை அடைவதால், அவை பூமியைத் தாக்குகின்றன. இவற்றை  பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் (Potentially Hazardous Objects) என்போம்.


பல்லாயிரக்கணக்கில்  இருக்கும் இந்தக் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நாசாவுடன் இணைந்து பல்வேறு  சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவற்றில் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் உலக நாடுகள் அமைப்பு (IASC - International Asteroids Search Collaboration) Citizen Scientist Program மூலம் மாணவர்களையும் ஆர்வமுடைய பொதுமக்களையும் ஈடுபடுத்துகிறது.  இதற்கான பயிற்சியும்  அளித்து,  குறுங்கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்நாட்டிலிருந்து திருச்சி வானியல் கழகம்(திருச்சி ஆஸ்ட்ரோ கிளப்) மூலம் 4 பேர் கொண்ட குழு பங்கேற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், திருச்சி ஆஸ்ட்ரோ   கிளப் தலைவர்  பாலா பாரதி, திருச்சி ஜோசப் கல்லூரி B.Sc இயற்பியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆழி முகிலன் இருவரும் இணைந்து மூன்று குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து  சர்வதேச விண்வெளி அமைப்பான நாசா சான்றிதழ் வழங்கியுள்ளது.



திருச்சியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குறுங்கோள்களுக்கும் BBM2101,  BBM2102, BBM2103 எனத் தற்காலிக பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் இந்த குறுங்கோள்களின்  அளவு, சுற்றுப்பாதை, பூமியைத் தாக்குமா? உள்ளிட்டவை உறுதி செய்யப்படும். தொடர் ஆய்வின் முடிவில் இவற்றைக்  கண்டுபிடித்தவர்கள் பரிந்துரை செய்யும் பெயர் வைக்கப்படும்.

கடந்த 1908 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி சைபீரியாவை பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜுன் 30 ஆம் தேதிஉலக குறுங்கோள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. குறுங்கோள்கள் கண்டுபிடிப்பில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் ஆர்வமுடைய மாணவர்கள் ஒருங்கிணைத்து பயிற்சி அளித்து வருகிறது.
Published by:Murugesh M
First published: