Home /News /tamil-nadu /

திருச்சி அரியாறு கரை உடைப்பு : குடியிருப்பு, விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்

திருச்சி அரியாறு கரை உடைப்பு : குடியிருப்பு, விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்

அரியாறு கரை உடைப்பு

அரியாறு கரை உடைப்பு

திருச்சி அரியாறு கரை உடைப்பால்  500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சி மாவட்டம் புங்கனூர் அருகே அரியாறு கரை உடைப்பால்  500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  தொடர்ந்து இதே நிலை நீடித்தால் நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    அரியாது கரை உடைந்ததால் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அரியாற்றின் மறுபுறம் உள்ள மற்றுமொரு கரை உடையும் அபாயத்தில் உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் நீர்வளத் துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து சரி செய்யும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஒரு கரை உடைந்தால், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்படும், ஏற்கனவே கோரையாறு வெள்ள நீரினால் கருமண்டபம் தீரன் நகர் உறையூர் லிங்கா நகர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
    தொடர் மழையின் காரணமாக மணப்பாறையில் உள்ள 9 குளங்கள் நிரம்பி அங்கிருந்து வடிந்து வரும் நீர் அரியாறு வழியாக செல்கிறது.

    அரியாறு உடைப்பினால் 500க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் நீர் வடியாமல் இதே நிலையை இன்னும் நீடித்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலையில் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    அரியாறு உடைப்பினால் அப்பகுதி ஒரு தீவு போன்று காணப்படுகிறது. தொடர்ந்து 48 மணி நேரமாக அரியாறு வெள்ளம் வந்து கொண்டிருப்பதால், மேலும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து கொண்டிருக்கிறது.

    Must Read : ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

    இந்நிலையில், கரை உடைப்பினை உடனே சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Flood, Trichy

    அடுத்த செய்தி