ஊரடங்கு மீறல்: 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.27 லட்சம் அபராதம் விதிப்பு!

வாகனங்கள் பறிமுதல்

திருச்சியில் ஊடரங்கை மீறியதாக இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க தினமும் தண்ணீர் தெளித்து பராமரிக்கப்படுகின்றன.

  • Share this:
திருச்சியில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இது தொடர்பாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.  இம்மாதம் 7ம் தேதிவரை முழு ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு பதிவு செய்யப்பட்டு, அனுமதி(இ.பதிவு)  வழங்கப்பட்டு வருகிறது. மிக மிக அவசியத் தேவைக்கு மட்டும் வெளியில் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் தேவையின்றி சுற்றித் திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அபராதங்களும் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில், ஊரடங்கை நடைமுறைப்படுத்த, மாநகர் முழுக்க 8 நிலையான சோதனைச் சாவடிகள், 24 தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் & ஊர்க்காவல் படையினர் பணியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி முதல் தற்போது வரைஇருசக்கர வாகனங்கள் - 5, 756, மூன்று சக்கர வாகனங்கள் - 1824, நான்கு சக்கர வாகனங்கள் - 69 என மொத்தம் 6, 041 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாதது, ஊரடங்கை மீறி கூடியது உள்ளிட்ட 12, 494 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. ரூ.27, 20, 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க தினமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. முழு ஊரடங்கு முடிந்த பின்னர், இந்த வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: