ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: 5 வினாடி தாமதத்தால் ஏற்பட்ட விமான விபத்து!

Exclusive: 5 வினாடி தாமதத்தால் ஏற்பட்ட விமான விபத்து!

விமான விபத்து

விமான விபத்து

விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் இன்னும் கூடுதலாக இருந்திருந்தால், இந்த விபத்தை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். தற்போது விமான நிலையத்தின் ஓடுதளம் 8, 136 அடியாக உள்ளது.  இதில் சிறிய ரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும். இந்த ஓடு தளத்தை 12, 500 அடிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் இருந்து துபாய் நோக்கி சென்ற ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கு 5 வினாடி தாமதமே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா &  வளைகுடா நாடுகள் உள்ளிட்டவற்றிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதிக வருவாய் ஈட்டும் விமான நிலையங்களில் ஒன்றாகவும் திருச்சி  விமான நிலையம் உள்ளது. குறிப்பாக, கொரோனா நெருக்கடி காலத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர அதிக விமான சேவை செய்து வரும் விமான நிலையமாகவும் திருச்சி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி திருச்சியில் இருந்து துபாய்க்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 போயிங் ரக விமானம் 130 பயணிகளுடன் சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து  பறக்கத் தொடங்கும் முன்பாக, விமான நிலையத்தின் தொலைத் தொடர்பு ஆன்டெனாக்கள்,  புதுக்கோட்டை சாலையில் உள்ள தடுப்புச் சுவர் ஆகியவற்றை உரசியபடி சென்றது.

இதில், விமான நிலைய ஆன்டெனாக்கள், தடுப்புச் சுவர் சேதமடைந்தது. விமானத்தின்  அடிப்பாகம் , சக்கரம் உள்ளிட்டவை சேதமடைந்தன. விமானம் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு உயிர்ச் சேதம் இல்லை. ஆனாலும் இந்த விபத்து அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை!

விமான நிலைய பாதுகாப்புத்துறை, பொறியியல் , தொழில் நுட்ப பிரிவினர் விபத்து நடைபெற்ற பகுதி மற்றும் விமானத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விமான விபத்து குறித்த புலனாய்வுப் பிரிவின்(Aircraft Accidents Investigation Bureau)  இறுதி அறிக்கை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், விபத்து நடைபெற்ற விதம், அதற்கான காரணம், தீர்வுகள் என 70 பக்கத்திற்கு மேற்பட்ட அறிக்கையை அளித்துள்ளனர். குறிப்பாக, விபத்திற்கான காரணத்தில், விமானியின் இருக்கை சரியாக பொருந்தி இல்லாததால், விமானத்தை இயக்க 5 வினாடிகள் தாமதமாகி,  விமானம் புறப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் இருந்து பறக்கத் தொடங்கும் முன் (டேக் ஆப்) ஓடுதளத்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஓடுதளத்தின் தூரம் முடிய 2,000 அடி மட்டுமே இருந்ததால், அந்த நேர நெருக்கடியில் வேறு வழியின்றி பறக்க  தொடங்கியுள்ளது.

Also read: கீழடியில் கிடைத்த வெள்ளிக் காசு: புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

விமானத்தை ஓடு தளத்தில் நிறுத்த முயற்சித்திருந்தால்,  சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்கு வந்து விடும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கும். எனவே விமானி சாமர்த்தியமாக விமானத்தை இயக்கியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் இன்னும் கூடுதலாக இருந்திருந்தால், இந்த விபத்தை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் குறைவதற்கு காரணம் என்ன?

தற்போது விமான நிலையத்தின் ஓடுதளம் 8, 136 அடியாக உள்ளது.  இதில் சிறிய ரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும். இந்த ஓடு தளத்தை 12, 500 அடிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள விரிவாக்கப் பணிகளை விரைவு படுத்த வேண்டும். அப்போதுதான், பெரிய ரக சரக்கு & பயணிகள் விமானங்களையும் திருச்சிக்கு இயக்க முடியும். இதன் மூலம்  சரக்குகளையும் ஏற்றி வரலாம். வருவாய் இன்னும் பெருகும் என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்து குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Airport, Flight Accident, Trichy