Home /News /tamil-nadu /

வனப்பகுதியை ஆக்கிரமித்து ஆசிரமம்.. சந்தனக் கட்டைகள் பறிமுதல்: சிக்கலில் நரபலி சாமியார்

வனப்பகுதியை ஆக்கிரமித்து ஆசிரமம்.. சந்தனக் கட்டைகள் பறிமுதல்: சிக்கலில் நரபலி சாமியார்

சந்தனக் கட்டை

சந்தனக் கட்டை

'தனி நபர் ஒருவர் ஐந்து கிலோ வரை சந்தன கட்டைகளை வைத்து இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். அதற்குமேல் வைத்திருந்தால் அவர்களை கைது செய்யலாம்' என்று சட்டம் இருந்தும், இருவரையும் கைது செய்யாமல், அபராதம் மட்டுமே விதித்து விட்டு விடுவித்தது ஏன்?' என்று வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
திருச்சியில்  சர்ச்சை சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர் 22 கிலோ சந்தனக்  கட்டைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே டி.பாதர்பேட்டை கோம்பை கிராமத்தில், பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தார். கொல்லிமலை அடிவாரப் பகுதியான இங்கு, வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும், கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன், இங்கு பில்லி, சூனியம், மந்திரம், மாந்தீரிக வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். இதையடுத்து உடனடியாக, கார்த்திகேயனின் ஆசிரமத்தை வருவாய்த் துறையினர் இழுத்துப் பூட்டி 'சீல்' வைத்தனர்.

22 கிலோ சந்தனம்

இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் வனத்துறை அதிகாரி பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர், ஆசிரம மேலாளர் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதையும் படிங்க: சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்.. ஒன்றரை மணி நேரம் நீடித்த அதிசயத்தை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம்..


அப்போது அவர், ஆசிரமத்தில் உள்ள பொருட்களை பெரிய சாக்கு மூட்டையில் கட்டி, பாதர்பேட்டையில் உள்ள விவசாயி வெங்கடேசன் (52) என்பவர் வீட்டில் வைத்து இருப்பதாக கூறினார்.

வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியபோது, 'சாக்கு மூட்டையில் உள்ளவை அனைத்தும் ஆசிரமத்தில் உள்ள பூஜைப் பொருட்கள் மற்றும் விபூதி அரைக்கும் மிஷின்' என்று கூறினார். மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது, அதில் சந்தன கட்டைகள் இருந்தன. மொத்தம், 22 கிலோ சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

'வெறும்' அபராதம்

மேலும், சந்தனக் கட்டைகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த விவசாயி வெங்கடேசன் மற்றும் ஆசிரம மேலாளர் மணிகண்டனுக்கு  ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவின் பேரில், சேலத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: டேபிளை உடைத்து அட்டகாசம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் மீது வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...


'தனி நபர் ஒருவர் ஐந்து கிலோ வரை சந்தன கட்டைகளை வைத்து இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். அதற்குமேல் வைத்திருந்தால் அவர்களை கைது செய்யலாம்' என்று சட்டம் இருந்தும், இருவரையும் கைது செய்யாமல், அபராதம் மட்டுமே விதித்து விட்டு விடுவித்தது ஏன்?' என்று வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், இவ்வழக்கில் வனத்துறை உயரதிகாரிகள் மறுவிசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

நரபலி சாமியார்?
கடந்த 2016ம் ஆண்டு, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில், மூலிகை செடி வளர்க்கும் பண்ணை என்ற பெயரில் கார்த்திகேயன் குடில் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இதை படிக்க: தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை..மனைவியிடம் கத்திமுனையில் 100 சவரன் கொள்ளை - புதுக்கோட்டையில் பரபரப்பு


இங்கு, குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவிய தகவல் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிலை அடித்து நொறுக்கி, தீயிட்டு கொளுத்தினர்.

அதையடுத்து, பெரம்பலூர் எம்எம் நகரில் வீடு எடுத்து தங்கிய கார்த்திகேயன், இறந்து போன இளம்பெண் பிணத்தை வைத்து அகோரி பூஜை செய்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Murugesh M
First published:

Tags: Crime News, Trichy

அடுத்த செய்தி