Home /News /tamil-nadu /

மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி ஏதும் இல்லாமல் 100 ஆண்டுகளாக தவிக்கும் பழங்குடியின மக்கள்... ஊரை விட்டும் விரட்டவும் முயற்சி

மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி ஏதும் இல்லாமல் 100 ஆண்டுகளாக தவிக்கும் பழங்குடியின மக்கள்... ஊரை விட்டும் விரட்டவும் முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே 100 ஆண்டுகளாக மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் பழங்குடியின மக்களை ஊரை விட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அல்லித்துறை முருகன் கோயில் அருகே 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 'மலை ஒட்டர்கள்' என்ற பழங்குடியின வகுப்பை சார்ந்த இவர்கள், கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், அல்லித்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அழைத்து வரப்பட்டனர். வீடுகள் தோறும் நவீன முறையிலான கழிப்பிடங்கள் வந்த பிறகு, இவர்களுக்கு வேலை இல்லாமல் போனது.

    அதன்பிறகு, இவர்கள் ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் அன்றாட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மிகுந்த வறுமையில், பாழடைந்த வீடுகளில் வாழும் இவர்கள், அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த இவர்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு வரை வீட்டு வரியும் செலுத்தி உள்ளனர். ஆனால், தற்போது, பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு வரி வாங்க மறுப்பதாவும், தங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கடந்த பத்தாண்டுகள் முன்பு திமுக ஆட்சியில் இப்பகுதி மக்களுக்கு 'கான்கீரிட் வீடுகள் வழங்குவதற்கான தகுதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த ஒரேயொரு 'தகுதி அட்டை' மூலம், இவர்களின் அடிப்படை வசதிகளுக்கான வாட்டமும், மின்சாரத்துடன் கூடிய வீட்டிற்கான ஏக்கமும் தீருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
    Published by:Vijay R
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி