• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்..!- அமைச்சர் சூப்பர் அப்டேட்

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்..!- அமைச்சர் சூப்பர் அப்டேட்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்படும். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார் என்றார்.

    மேலும் தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் நொச்சியம் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட மத்திய அரசுக்கு திட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்புற பகுதிகளையும் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தல் உள்ளபடியே நேர்மையாக நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் முறைகேடுகள் நடந்தன. அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி? எங்களுக்கு வந்தால் ரத்தமா?
    உள்ளாட்சித் தேர்தலில் பின்னால் வரும் தோல்வியை முன்னாலே அவர்கள் சொல்வதற்காக இப்படி சொல்கிறார்கள்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: