• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Assembly Election results 2021 | வாக்கு எண்ணிக்கை: திருச்சியில் 3000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tamil Nadu Assembly Election results 2021 | வாக்கு எண்ணிக்கை: திருச்சியில் 3000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பாதுகாப்பு பணியில் போலீஸ்

பாதுகாப்பு பணியில் போலீஸ்

திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் 4 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தடுப்புகள், இரும்பு கம்பி வளையங்கள் என முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மேற்கு தொகுதியில் 28 சுற்றுகள், திருச்சி கிழக்கு தொகுதியில் 27 சுற்றுகள் என 9 தொகுதிகளிலும் மொத்தம் 241 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9 தொகுதிகளிலும் மொத்தம் கண்காணிப்பாளர்கள், நுண்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என 459 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் உள்ளனர்.

மையங்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு உடைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள அனைவரும்
போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

மேலும் படிக்க... Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில்...

வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரவிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்கள் நியமனம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: