ஆனந்த குளியல் போடும் திருவானைக்காவல் கோயில் யானை; முன்மாதிரி திட்டத்தில் நீச்சல் குளம்!

ஆனந்த குளியல் போடும் திருவானைக்காவல் கோயில் யானை அகிலா

தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள, நீச்சல் குளத்தில் கோயில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டு மகிழ்கிறது.

  • Share this:
பஞ்ச பூத சிவத் தலங்களில் நீர்த் தலமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. வரலாற்று, புராதனச் சிறப்பு பெற்ற இக்கோயிலில் கடந்த 2011ம் ஆண்டு முதல் அகிலா என்கிற பெயருடைய யானை உள்ளது.

தற்போது 19 வயதுடைய யானைக்கு ஏற்கனவே ஷவர் குளியல் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் சுமார் ₹ 3.5 லட்சம் மதிப்பீட்டில் 20 அடி நீளம், 20 அடி அகலத்தில், 6 அடி உயரத்திற்கு  நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் ஒருங்கிணைப்பில், கோயில் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்த கற்களைக் கொண்டும், கோயில் பணியாளர்களின் உடல் உழைப்பில், பக்தர்கள், நன்கொடையாளர்களின் வழங்கிய சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீச்சல் குளத்திற்கு வருவதற்கான சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்று தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள, நீச்சல் குளத்தில் கோயில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டு மகிழ்கிறது.

மேலும் யானை அகிலாவிற்கு என தனியாக நடை பயிற்சியுடன் கூடிய தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 4 1/2 ஏக்கர் அளவில் பசும் தீவனங்கள் பயிரிடப்பட்டு, யானை & பிற கால் நடைகளுக்கும் வழங்கி வருகின்றனர்.

Also read: சாட்டை துரைமுருகன் மீது புகார் அளித்தவர் திமுகவில் இணைந்தார்

நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா யானையை பலரும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். ஏற்கனவே ஷவர் குளியலில் குஷியாக இருந்த அகிலா தற்போது இன்னும் கூடுதல் புத்துணர்வுடன் உள்ளது என்கிறார்கள் பாகன்கள்.
Published by:Esakki Raja
First published: