• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இவர்கள் கொங்குநாடு கேட்கிறார்கள்.. ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார்.. என்னாவது தமிழகம்? திருநாவுக்கரசர் கேள்வி

இவர்கள் கொங்குநாடு கேட்கிறார்கள்.. ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார்.. என்னாவது தமிழகம்? திருநாவுக்கரசர் கேள்வி

திருநாவுக்கரசர் எம்.பி

திருநாவுக்கரசர் எம்.பி

விமான நிலைய விரிவாக்க பணிக்கு இதுவரை 46 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார். 

  • Share this:
    தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை. வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது என திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார்.

    திருச்சி விமான நிலைய ஆணையக்குழு ஆலோசனை கூட்டம், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    Also read: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

    கூட்ட முடிவில், எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுமார், 700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ராணுவத்தின் நிலத்தை பெற, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தேன்.ராணுவ நிலத்தை வழங்க, உரிய ஏற்பாடுகளை செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மற்றபடி, பொதுமக்களின் ஒப்புதலோடு நிலம் எடுக்க வேண்டும் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இதுவரை, 46 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப் பட்டுள்ளது.

    விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள், தொடர்மழை மற்றும் கொரானா காரணமாக குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. வரும், 2022 ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றார்.

    கொங்கு நாடு

    தமிழ்நாட்டில் 'கொங்கு நாடு' என்று ஒன்றில்லை. ஒரே ஒரு நாடு தமிழ்நாடு மட்டும்தான். அந்தபக்கம் டாக்டர் ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார். இந்தபக்கம் இவர்கள் கேட்கிறார்கள். இப்படி பிரித்துக் கொண்டே சென்றால் என்னாவது? எனக்கு தெரிந்து, தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை. வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

    தலைவர் பதவி

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை நான் யாரிடமும் சென்று கேட்கவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    தலைமை எனக்கு பணித்தால், அந்த பணியை திறம்பட செய்ய நான் தயாராக இருக்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்" என்றார்.

    செய்தியாளர் - கதிரவன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: