• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நூற்றாண்டு பழமை வாய்ந்த விண்டேஜ் கேமரா கார் - திருச்சியில் இருந்து சிங்கப்பூர் அருங்காட்சியகத்தை அலங்கரிக்க தயாரானது

நூற்றாண்டு பழமை வாய்ந்த விண்டேஜ் கேமரா கார் - திருச்சியில் இருந்து சிங்கப்பூர் அருங்காட்சியகத்தை அலங்கரிக்க தயாரானது

விண்டேஜ் கேமரா கார்

விண்டேஜ் கேமரா கார்

சிங்கப்பூரில் உள்ள கேமரா அருங்காட்சியகத்தின் முன்னால் நிறுத்துவதற்காக ஓர் கேமரா கார் வடிவமைத்துள்ளனர்.

  • Share this:
    சிங்கப்பூர் அருங்காட்சியகத்திற்கு கேமரா வடிவில் மூன்று மாத காலமாக 5 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட கார்.

    புதுமையான சிந்தனைகள், செயல்பாடுகள் மூலமாகவே சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர்.அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள கேமரா அருங்காட்சியகம் ஒன்று தனது புகழை வெளி உலகிற்கு  தெரிவிக்கும் வகையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த விண்டேஜ் கேமராவை புதிதாக வடிவமைத்து காட்சி படுத்த உள்ளது. இந்த கேமராவை வடிவமைத்தது திருச்சியைச் சேர்ந்த நிறுவனம் என்பது தான் இதன் ஹைலைட்.

    திருச்சியில் செயல்பட்டு வரும் ஃப்ரீகேட் (Frigate) பொறியியல் நிறுவனம் தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் புதுமையான சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தொழிலகங்கள், சினிமா, விவசாய துறைக்குபல்வேறுவிதமான அதிநவீன கருவிகளை உருவாக்கித் தருவதில் சாதனை படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில்  சிங்கப்பூரில் உள்ள கேமரா அருங்காட்சியகத்தின் முன்னால் நிறுத்துவதற்காக ஓர் கேமரா கார் வடிவமைத்து தரும்படி கேட்ட பொழுது இவர்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உலகின் முதல் கேமரா கார் நிறுத்தி வைப்பதற்காக மட்டுமில்லாமல் இயக்குவதற்கும் ஏதுவான வகையில் (Camera on Car) உருவாக்கி அசத்தியுள்ளனர்.

    கேமரா கார்


    இக்கண்டுபிடிப்பு குறித்து ஃபரிகேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழினியன் நம்மிடம் கூறுகையில்,” சிங்கப்பூரின் கேமரா அருங்காட்சியகத்தில் இருந்து  நூற்றாண்டு பழமையான அபூர்வ இரட்டை லென்ஸ் பெல்லோஸ் மரக் கேமராவின் மெகா சைஸ் மாதிரி ஒன்றை காண்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் தயாரித்து தரும்படி எங்களை அணுகினர்.அந்த அருங்காட்சியகத்தில் உள்ள கட்டிடங்கள் கூட கேமராவை பிரதிபலிக்கும் பொழுது இந்த கேமரா கார் அருங்காட்சியகத்தை பலரும் பார்வையிடுவதற்கு ஏதுவான வகையில் அமைத்திட வேண்டும் என்று எங்கள் குழுவினர்களோடு இணைந்து சிந்தித்தோம்.

    இதற்கான மாதிரிகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது அவர்களுக்கு   மிகவும் பிடித்து போனது. அதனைத் தொடர்ந்து நகரும் vintage Camera வை உருவாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டோம் .இரட்டை லென்ஸ் போன்ற வடிவமைப்பு காரில் அமைக்கப்பட்டு இருந்தாலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.லென்ஸ் போன்று பொருத்தப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகள் மூலமாக காரை ஒருவர் இயக்கும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2 கேமரா லென்ஸுடன் பொருந்தும் வகையில் கண்ணாடி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏறத்தாழ 30 பேர் இதனை உருவாக்கும் பணியில் நீண்டநாள் ஈடுபட்டோம். கடந்த 3 மாதமாக ரூ5 லட்சம் செலவில் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழு கேமரா கார்  திருச்சியில் உள்ள உள்ளூர் பணியாளர்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. கேமராவின் மடிக்கக்கூடிய ரெக்சின் பொருள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.சில வாரங்களில் கேமரா  கன்டெய்னர் மூலம் சென்னை துறைமுகம் வழியாக அனுப்பி வைக்க இருக்கிறது.

    பெட்ரோலால் இயக்கப்படும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கேமரா கார் திருச்சியிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது திருச்சிக்கும்  பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நண்பன் சினிமாவில் வரும் கிளைமாக்ஸ் காட்சி செட்டுகள் இவர்களின் கைவண்ணத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: இ.கதிரவன் ( திருச்சி)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: