• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் உடைந்த எம்.ஜி.ஆர் சிலை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருச்சியில் உடைந்த எம்.ஜி.ஆர் சிலை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

எம்.ஜி.ஆர் சிலை உடைப்புக்கு காரணம் இதுதான்

எம்.ஜி.ஆர் சிலை உடைப்புக்கு காரணம் இதுதான்

திருச்சியில் உடைந்த எம்.ஜி.ஆர் சிலை விஷமிகளின் செயல் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
திருச்சி மாநகரம் மரக்கடை பகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்  சிலை வைக்கப்பட்டது.
இதை, அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். கடந்த 26 ஆண்டுகளாக இருந்த எம்.ஜி.ஆரின் சிலை நேற்று  உடைபட்டு இருந்தது.

சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைந்து தனியாக கிடப்பதை  அறிந்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

மிகவும் பரபரப்பான பகுதியான மரக்கடை பகுதியில் 5க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து, கைது  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். பல ஆண்டுகளாக உள்ள சிமெண்ட் சிலை என்பதால், இயற்கையாகவே சிதிலமடைந்ததா? அல்லது சதிச் செயலா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிமெண்ட் சிலை என்பதால், உடைந்து விழுந்துள்ளது. விஷமிகளின் செயல் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், திருச்சி மாநகரில் மரக்கடையில் எம்.ஜி.ஆர் சிலை உடைந்தது குறித்து முதலமைச்சரின் உத்தரவுப்படி சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்ட புலனாய்வில், இந்த சிலை விஷமிகளால் உடைக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறையால்  துணியால்  மூடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க... இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு

நடத்தை விதிகள் விலக்கப்பட்டதையடுத்து, சிலையைச் சுற்றியிருந்த துணிகளை அகற்றும் போது கை மணிக்கட்டுடன் உடைந்து விழுந்தது. எனவே இதை அரசு செலவில் சீரமைக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ”ரெம்டெசீவர் மருந்து விற்பனைக்கு  தினமும் 300 மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சான்றிதழ் சரிபார்ப்பின் போது 18 பேரின் சான்றிதழ்கள் சரியாக இல்லாததால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக ரெம்டெசீவர் மருந்தை விற்பனை செய்யப்படுவதாக இதுவரை புகார் இல்லை. அப்படி விற்கப்படுவதாக தகவல் இருந்தால், எங்களுக்கு புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: