Exclusive : திருச்சியைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரரின் 6 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது

arokia rajiv

ஆரோக்கிய ராஜுவ் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை உள்ள பகுதி, முட்புதராக இருக்கிறது. இதை அகற்றி, மேலும் சிலருக்கும் இங்கு வீட்டு மனை வழங்கப்படவுள்ளது என்று வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

  • Share this:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த செளந்தர்ராஜன் மகன் ஆரோக்கிய ராஜுவ். இந்திய ராணுவ வீரர். சிறுவயது முதலே தடகளத்தில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றவர். குடும்ப வறுமையையும் வென்று சாதித்து வருபவர். தற்போது நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் , முந்தைய ரியோ ஒலிம்பிக் என  2 ஒலிம்பிக் போட்டிகளில் 4× 400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காக ஓடியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆரோக்கிய ராஜுவ் அடங்கிய இந்திய அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஓரிரு வினாடிகளில் இழந்தாலும் ஆசிய சாதனைப் படைத்து, பாராட்டைப் பெற்றுள்ளது.

ஆசிய, காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச தடகளப் போட்டிகளில் ஆரோக்கிய ராஜுவ் பதக்கம் வென்ற, இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். மத்திய அரசின்  அர்ஜூணா விருதும் பெற்றுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Also Read: மாநிலங்களவையில் கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு – பாட்டுப்பாடி எம்.பிக்கள் அமளி..

அப்போது, வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு வழுதியூர் கிராமத்தில் அரசு இலவச மனை வழங்கக் கோரி, ஆரோக்கிய ராஜுவின் தந்தை 2014ம் ஆண்டு மனு அளித்தார். இதையடுத்து லால்குடி அருகே அரியூரில் 2 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை நிலத்தை ஒப்படைக்கவில்லை.

arokia rajiv


கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி, முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை கோரிக்கை மனு அனுப்பியும் பலன் இல்லை. பட்டா கிடைத்து விட்டது. நிலம் கிடைக்குமா என்று காத்திருக்கிறோம். ஆறாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம் என்றார் ஆரோக்கிய ராஜுவின் தாயார் லில்லி சந்திரா. ஆரோக்கிய ராஜுவ் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனை உள்ள பகுதி, முட்புதராக இருக்கிறது. இதை அகற்றி, மேலும் சிலருக்கும் இங்கு வீட்டு மனை வழங்கப்படவுள்ளது என்று வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Also Read: Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நீயூஸ் 18 பிரத்யேக செய்தியை நேற்று வெளியிட்டது. இந்நிலையில், செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து ஓரிரு நாட்களில் வீட்டுமனை ஒப்படைக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் அரியூர், வழுதியூர் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆரோக்கிய ராஜுவ் குடும்பத்தினரிடம் நேரில் உறுதியளித்துள்ளனர்.

Also Read: பாஜகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ!

முட்புதர்களை அகற்றி உடனே மனையை ஒப்படைக்க உள்ளதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.ஆறாண்டுகளாக அலைந்து கொண்டிருந்த நிலையில், உடனடி தீர்வு காணும் வகையில் செய்தி வெளியிட்ட நியூஸ் 18க்கு ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜுவ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கிய ராஜுவ் தாயார் லில்லி சந்திரா


ஆரோக்கிய ராஜீவ் குடும்பத்தினருக்கு லால்குடி வட்டம், அரியூர் கிராமத்தில் ஏற்கனவே வீட்டுமனை அடமான பட்டா வழங்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவையடுத்து, புல எண்.5/91 என உட்பிரிவு செய்து வீட்டு மனை பட்டா வழங்க பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைப் பட்டாவை லால்குடி வட்டாட்சியர் ஆரோக்கிய ராஜுவ் தாயார் லில்லி சந்திராவிடம் வழங்கினார்.

 
Published by:Arun
First published: