Home /News /tamil-nadu /

மிஸ்டுகால் கொடுத்தால் 'பீஸ்ட்' படத்தின் டிக்கெட்.... விஜய் மன்ற நிர்வாகி சொன்ன விலையால் அலறும் ரசிகர்கள்

மிஸ்டுகால் கொடுத்தால் 'பீஸ்ட்' படத்தின் டிக்கெட்.... விஜய் மன்ற நிர்வாகி சொன்ன விலையால் அலறும் ரசிகர்கள்

பீஸ்ட்

பீஸ்ட்

Vijay Beast Movie : 'ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டும்' என்பதற்காக உருவாக்கப்பட்ட ரசிகர்கள் ஷோ, தற்போது வணிகமயமாக்கிய பெருமை, விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளையே சாரும். 

தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். அவர் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்.13ம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நேற்று துவங்கியது.

புக்கிங் துவங்கிய ஒரு சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. 'வலைத் தளவாசிகள்'  என்ற போர்வையில் சில புரோக்கர்கள் பாதி டிக்கெட்டுகளையும், மீதி டிக்கெட்டுகளை தியேட்டர் உரிமையாளர்களும் புக் செய்து முடித்து விட்டனர்.  இதனால், நியாயமான டிக்கெட் விலையில் படம் பார்க்க நினைத்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

200 ரூபாய்க்கு ரசிகர் ஷோ டிக்கெட்டை பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்திருக்கிறது, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் 'ஆயிரம் ரூபாய்' டிக்கெட் விற்பனை. அதுவும் ஹைடெக்காக, 'ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் டிக்கெட் டெலிவரி' என்ற பாணியில் அவர்கள் அதிரடித்து வருகின்றனர். இந்த ஹைடெக் விற்பனையில், திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை, ரசிகர் ஷோ டிக்கெட் ஆயிரம் ரூபாயாகவும், மற்ற ஷோக்கள், 500 ரூபாய் என்றும் சரமாரியாக விலை ஏற்றி விற்கப்படுகிறது.

அநியாய டிக்கெட் விலை குறித்து அலறிய விஜய் ரசிகர்கள், 'மிஸ்டு கால்' மட்டுமே தரவேண்டும் என்று ஒரு மொபைல் எண்ணை நமக்கு பகிர்ந்தனர். அதில், ' மிஸ்டு கால்' கொடுத்தோம். உடனே நம்மை அழைத்த நபர், தன்னை முருகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ALSO READ |  தளபதியாக இருக்கப் போகிறேனா... தலைவனாகப் போகிறேனா? - நடிகர் விஜய் பதில்
 ரசிகர் ஷோ டிக்கெட் ஆயிரம். மற்ற ஷோ டிக்கெட், 500 என்று கூறிய அந்த நபர், 10 டிக்கெட் இல்லை எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் தருகிறேன். மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அடுத்தாக, "பணத்தை வைத்து கொண்டு அலைய வேண்டாம். 'ஜி பே'யில் பணத்தை அனுப்பினால் போதும்" என்று நம்மை அதிரடித்தார். இதனிடையே தொலைபேசியல் தொடர்பு கொண்ட நபர் விஜய் மன்ற நிர்வாகி என்பதும் தெரிய வந்துள்ளது.


'ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டும்' என்பதற்காக உருவாக்கப்பட்ட ரசிகர்கள் ஷோ, தற்போது வணிகமயமாக்கிய பெருமை, விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளையே சாரும். அவர்கள் தான் ரசிகர்களுக்கு என்று, ஒரு டிக்கெட், 200 ரூபாய் என மலிவு விலையில் தியேட்டர்களில் ஷோ வாங்கி, அந்த டிக்கெட்டுகளை ஆயிரம் ரூபாய் விற்று கொழுத்த லாபம் பார்க்கின்றனர். அப்பாவி ரசிகர்கள், வெறும், 200 ரூபாய் டிக்கெட்டை, ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அநியாயமாக ஏமாறுகின்றனர்.

ALSO READ |   Beast : ரிலீஸிற்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் பீஸ்ட்..
-  விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வரும் நிலையில், அதன் நிர்வாகிகளோ அதற்கு முன்னரே முழு அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டனர் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Actor Vijay, Thalapathy

அடுத்த செய்தி