• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீராங்கனை சுபாவை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட ஆசிரியர்.. ஷு வாங்க கூட முடியாத நிலையில் பயிற்சி!!

வீராங்கனை சுபாவை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட ஆசிரியர்.. ஷு வாங்க கூட முடியாத நிலையில் பயிற்சி!!

வீராங்கனை சுபாவை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட ஆசிரியர்..

வீராங்கனை சுபாவை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட ஆசிரியர்..

தடகளப் போட்டிகளில் சர்வதேச அளவில் 8 போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்களும் தேசிய அளவில் 20 பதக்கங்களும் பெற்றுள்ளதாக வீராங்கனை சுபா கூறியுள்ளார்.

  • Share this:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு உலக நாடுகள் தயாராகி விட்டன. விளையாட்டு வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் 26 பேர் கொண்ட பட்டியலை இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதில், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லால்குடி ஆரோக்கிய ராஜுவ், குண்டூர் தனலட்சுமி, திருவெறும்பூர் சுபா, மதுரை ரேவதி மற்றும்  நாகநாதன் பாண்டி  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தேசிய, சர்வதேச அளவிலான பல போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை சுபா வெங்கடேசன் 4×400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த சுபாவின் தந்தை வெங்கடேசன் கட்டுமான தொழிலாளி. செண்ட்ரிங் பணி செய்கிறார். தற்போது கோயம்புத்தூரில் உள்ளார். தாயார் பூங்கொடி. இவர்களது மூன்றாவது மகள் சுபா. திருச்சி கொதிகலன் தொழிற்சாலை பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர் கனகராஜால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சென்னையில் பயிற்சியாளர் இந்திரா மெருகேற்றியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சுபா கூறுகையில், பள்ளியில் படிக்கும் போதிருந்தே தடகளத்தில் ஆர்வம். பள்ளியில் படிக்கும் போது மாவட்ட அளவில் பதக்கம் பெற்றது ஊக்கத்தை தந்தது. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டேன். தடகளப் போட்டிகளில் சர்வதேச அளவில் 8 போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்களும் தேசிய அளவில் 20 பதக்கங்களும் பெற்றுள்ளேன்.

Also read: தயங்காமல் முயன்றால் சாதிக்கலாம்: ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான திருச்சி வீராங்கனை நம்பிக்கை பேச்சு!

ஒலிம்பிக்கில் சிறந்த பங்களிப்பை கொடுத்து, பதக்கம் வெல்வேன். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நிறைய முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் திருச்சி சுபா வெங்கடேசன் தாயார் பூங்கொடி கூறுகையில், பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர் கனகராஜ். கொடுத்த பயிற்சியால், பல போட்டிகளில் பங்கேற்க வைத்தார்.

ஆரம்பத்தில் பயிற்சிக்கு அனுப்ப சிரமமாக இருந்தது. அப்போதுள்ள குடும்ப சூழலில் ஷு வாங்கவே பணம் இல்லை. எனது சகோதரர் ஷு வாங்கி கொடுத்தார். தொடர்ந்து பயிற்சியாளர்கள் செய்த உதவி, ஊக்கத்தால், ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். நிச்சயம் பதக்கம் வெல்வார் என்கிற நம்பிக்கை உள்ளது. அரசு வேலைக்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. கிடைத்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: