திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே தள்ளுவண்டி கடைகளில் 24 மணி நேரமும் அரசு மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது.
தமிழக அரசு அரசு மதுபான கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளது,
இந்த நிலையில் அரசு மதுபானங்கள் திருவெறும்பூர் பகுதியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் குடிமகனும் எப்போது போதையிலும் சாலை வரும் விழுந்து கிடக்கின்றன இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே கக்கன்காலனி உள்ளது.
இங்கு அரசு மதுபான கடை அருகே உள்ள தள்ளுவண்டி கடைகளில் அரசு மதுபான பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே அப்பகுதியில் குடிமகன்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி மது அருந்தி வருகின்றனர். சிலர் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியை பார்த்தால் காலையில் ஏதோ காய்கறி மார்கெட் (சந்தை ) செயல்படுவது போலவும் அதில் ஆர்வமுடன் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வது போலவும் இருக்கும்.
பகல் நேரங்களில் அரசு மதுபான கடை திறந்து இருக்கும் போது கூட இவ்வளவு கூட்டம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அதிகாலை முதலே இவ்வளவு கூட்டங்கள் நிரம்பி வழிவது விந்தையாக உள்ளது. இந்தப்பகுதியில் இருந்து திருவெறும்பூர் காவல் நிலையம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதுமே அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் 24 மணி நேரமும் சென்றுவரும் சாலையாக உள்ளது. அந்த பாலத்தின் கீழே இப்படி கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பது யாருக்குதான் தெரியாது. எல்லோருக்கும் கப்பம் செல்வதனால்தான் யாரும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பெரியசாமி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.