திருச்சி மக்களை 'கவனிக்க' வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுரை
திருச்சி மக்களை 'கவனிக்க' வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுரை
கே.என்.நேரு
KN Nehru: கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், மக்களை நன்றாக 'கவனிக்க' வேண்டும். வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் - கே.என்.நேரு சூசகம்
கூட்டணிக் கட்சிகள் மக்களை 'கவனிக்க' வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேசியுள்ளார்.
திருச்சி மாநகராட்சித் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதை தொடர்ந்து, பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். திருச்சி வரகனேரி பஜாரில், தி.மு.க வேட்பாளர் ஜெய நிர்மலா, காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா, ம.தி.மு.க வேட்பாளர் கதீஜா ஆகியோரை ஆதரித்து, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது, அமைச்சர் கே.என். நேரு பேசியபோது, "வரகனேரி பகுதி திமுகவை வளர்த்த முன்னோடிகள் உள்ள பகுதி. இங்கு, தி.மு.கவினர் போட்டியிட கடுமையாக முயற்சித்த போதும், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துள்ளோம். நாம் திருச்சி மாநகராட்சி, 65 வார்டுகளிலும் ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க வேட்பாளர்களை நாங்கள் 'பார்த்துக்' கொள்கிறோம்.
கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், மக்களை நன்றாக 'கவனிக்க' வேண்டும். வெற்றியை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தனியாக இருந்தால் ஓப்பனாக சொல்லி இருப்பேன். பொது இடம் என்பதால் சூசகமாக சொல்கிறேன்" என்றார்.
செய்தியாளர்: விஜயகோபால் ( திருச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.