Tamilisai Soundarrajan | 'தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்
Tamilisai Soundarrajan | 'தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை
Tamilisai Soundararajan : 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசியும், 60 வயது முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்த வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஆய்வரங்கத்தில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசைசௌந்தரராஜன் பங்கேற்றார்.
தஞ்சை செல்வதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "உலகெங்கும் கொரானா தாக்கம் அதிகரித்து வருகிறது. 4வது அலை நிச்சயம் வரும் என்கிறார்கள். எனவே, முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசியும், 60 வயது முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Thank you friends in Trichy for your affectionate warm grand reception in the early morning at the airport enroute Thanjavur. Your enthusiasm & affection towards me energise me more & more to do hard work in service of Nation pic.twitter.com/iU0LsB81MP
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 30, 2022
மேலும் நீட் தேர்வு ரத்துக்காக, தமிழக முதல்வர்- ஜனாதிபதி சந்திப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழகத்திற்கு வருவதும், செய்தியாளர்களை சந்திப்பதும் எனக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், மற்ற ஆளுநர் அதிகாரத்திற்குட்பட்ட தமிழகத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க நான் விரும்பவில்லை" என்றார்.
செய்தியாளர் : திருச்சி விஜயகோபால்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.