தெற்காசியப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் வசதியின்றி தவிக்கும் தமிழக வீரர்கள்

தெற்காசியப் போட்டியில் பங்கேற்க வசதியின்றி தவிக்கும் தமிழக வீரர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து ஆரோக்கிய ராஜுவ், தனலட்சுமி, சுபா ஆகிய மூவர் தடகளப் பிரிவில் பங்கேற்கும் நிலையில், தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மூவர் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

  • Share this:
பூடான் நாட்டில் அடுத்த மாதம் 6 - 9 தேதிகளில் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய கபடி  அணியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டியைச்  சேர்ந்த அருண்.  புதுக்கோட்டை மாவட்டம் சிறுக்கத்தான்குடி விஜயகுமார் ஆகியோரும் தடகளப் போட்டியில் 1500 மீ ஓட்டத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வலசுப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமாரும் தேர்வாகியுள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் படித்து வரும் மூவரின் பெற்றோர்களும் ஏழ்மையான நிலையில் இருப்பதால்  கல்லூரி படிப்பிற்கே கடன் வாங்கி அனுப்பியுள்ள நிலையில், சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியும் பண வசதியில்லாத காரணத்தால், பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.குறிப்பாக, தள்ளு வண்டியில் துணி வியாபாரம் செய்து வந்த அருணின் தந்தை பக்கவாதத்தால் வீட்டில் முடங்கியதால் குடும்ப வருமானமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்.

Also Read : டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா?அதிகரிக்கும் கொரோனா; தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா

லாரி ஓட்டுநரான சரவணகுமாரின் தந்தை, விவசாயத் தொழிலாளியான விஜயகுமாரின் பெற்றொர் என அன்றாட செலவிற்கே அல்லல்படும் நிலையில் உள்ளனர்.
உணவு, தங்குமிடம், பணச்சீட்டு  என ஒவ்வொருவரும் தலா ₹ 40, 000 இன்றைக்குள் (ஜுலை 15ம் தேதி)  செலுத்த வேண்டும். எங்கும் கிடைக்காத நிலையில் ஜுலை 17ம் தேதி வரை காலக்கெடு கேட்டுள்ளனர்.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்கள் மேலும்  சாதிக்க, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க உதவி கேட்டு,  மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று உதவுவதாக மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார். அரசு உதவி ஒருபக்கம் இருந்தாலும் 2 நாட்களே இருப்பதால்,  இதைக்காணும் கொடையாளர்கள் யாரேனும் நிதியுதவி அளித்தால் பேருதவியாக இருக்கும் என்கிறார்கள் இந்த வீரர்கள்.

Also Read : டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டிகளின் இந்திய ஒளிபரப்பு நேரம்  

ஏனெனில் ஊரக இளைஞர்களுக்கான கடந்த மாதம் நேபாளில் நடைபெற்ற போட்டியில் மூவரும் பங்கேற்றுள்ளனர். இதில்,  சரவணக்குமார் தடகளத்தில் தங்கப் பதக்கமும்,  அருண், விஜயகுமார் இருவரும் கபடிப் போட்டியில்  பங்கேற்று தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர். நேபாளம் செல்வதற்கும் பணம் இல்லாமல் தவித்த போது திருச்சி தொழிலபதிபர் வீரசக்தியின் (திருச்சி கிழக்கு தொகுதியில் மநீம வேட்பாளர்)  நிதியுதவியால் பங்கேற்றனர்.

அப்போட்டியில்,பதக்கமும் வென்றனர். அதே ஊக்கத்தில் பூடானில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆனால், பண வசதியின்றி தவித்து வருகின்றனர். தகுதியிருந்தும் பணவசதியின்றி தவிக்கும் வீரர்களுக்கான தடை உடையுமா...?
வீரர்களுக்கு உதவ -சரவணகுமார் - தடகளம் - Cell - 63747 39554, அருண் - கபடி - Cell - 76038 75804. விஜயகுமார் - கபடி- Cell- 73395 07553

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: