• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் ஆதரவற்றோருக்கு தங்களது சேமிப்பிலிருந்து உணவளிக்கும் மாணவர்கள், இளைஞர்கள்!

திருச்சியில் ஆதரவற்றோருக்கு தங்களது சேமிப்பிலிருந்து உணவளிக்கும் மாணவர்கள், இளைஞர்கள்!

திருச்சியில் பசிப்பிணி போக்கும் வள்ளலார்கள்.

திருச்சியில் பசிப்பிணி போக்கும் வள்ளலார்கள்.

தேவைப்படுவோரை தேடிச் சென்று உணவளித்து வரும் முகம் காட்ட விரும்பாத பலரும் கொரோனா கொடுந்தொற்று காலத்தில் சத்தமில்லாமல் சேவை செய்து வருகின்றனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு, படிப்படியாக தளர்வுகளும் அளிக்கப்பட்டும் வருகின்றன. தினசரி கொரோனா தொற்றும் தற்போது குறைந்து வருகிறது. இது போன்ற நம்பிக்கையளிக்கும் முகம் தெரியா பலரின் சேவையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பொது முடக்கத்தால் பல்வேறு தொழில்கள் முடங்கி வருவாய், வேலை இழந்தனர். அரசின் நிவாரணம் ₹ 4,000  குடும்பத்திற்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் சாலையோரம் வசிப்போர், ஆதரவற்ற முதியோர்கள், அன்றாடம் யாசகம் பெற்று வாழ்வோருக்கு உணவு என்பது கேள்விக்குறியாகியது. இதைக் கண்டு பல்வேறு மாவட்டங்களிலும்  தன்னார்வ அமைப்பினர், தனிநபர்கள் தாங்களாவே களமிறங்கினர். வீட்டில் உணவு சமைத்தும் கடைகளில் வாங்கியும் தினமும் வழங்கி வருகின்றனர்.

அப்படி திருச்சி மாநகரிலும் மாவட்டத்திலும் பல்வேறு அமைப்பினர், முகம் காட்ட விரும்பாத தனிநபர்களும் தினமும் உதவி வருகின்றனர்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் குழுவாக இணைந்து உதவி வருகின்றனர். திருச்சி மாநகரில் மருத்துவ மாணவரான அபிசேக் அவருடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதத்திற்கு மேல் சாலையோர, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தங்களுடைய சொந்த சேமிப்பிலிருந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் இப்பணியில் பல நாட்கள் அசைவ உணவுகளை வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் மட்டுமின்றி உதவும் கரங்கள், அக்கினிச் சிறகுகள், எய்ம் டு ஹை, மக்கள் சக்தி இயக்கம், உலகநாதபுரம் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகளும் அன்பாலயம் செந்தில்குமார், உதவும் கரங்கள் ஷ்யாம்,  ஆசிரியை லதா பாலாஜி, பேராசிரியர் சதீஷ்குமார், மனிதம் அறக்கட்டளை தினேஷ், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அபிராமி, திருநங்கை ரியாவின் குழு என தனிநபர்களின்  உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக உணவு வழங்கி வருகின்றனர்.

தேவைப்படுவோரை தேடிச் சென்று உணவளித்து வரும் முகம் காட்ட விரும்பாத பலரும் கொரோனா கொடுந்தொற்று காலத்தில் சத்தமில்லாமல் சேவை செய்து வருகின்றனர். பசிப்பிணி போக்க தற்கால வள்ளலாராக களமிறங்கி உணவளித்து வருகின்றனர்.
குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய சேமிப்பில் இருந்து, ஆர்வத்தோடு இப்பணிகளில் ஈடுபட்டுள்ளது ஆக்கப்பூர்வமாகவும் அவர்களின் சேவை மனப்பான்மைக்கு சான்றாகவும் அமைந்துள்ளன. பலரும் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள மேம்பாலங்களுக்கு கீழ், சத்திரம், மத்திய பேருந்து நிலையங்கள், ரயில்வே சந்திப்பு அருகாமை, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், உறையூர்,  தில்லைநகர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இவர்களின் வாகன வருகைக்காக நம்பிக்கையோடு சாலையோரவாசிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் காத்திருக்கிறார்கள்.  இவர்களின் இந்த நம்பிக்கையே தொடர் சேவைக்கான ஆகப்பெரிய அங்கீகாரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: