ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு கடந்த 3 ஆம் தேதியிலிருந்து திருநெடுந்தாண்டகம் தொடர்ந்து பகல் பத்து விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலஸ்தானத்திலிருந்து அர்ஜுன மண்டபத்திற்கு வந்தடைந்து காட்சி தந்தார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்பு பின்னர் பக்தர்களை தனிமனித இடைவெளி பின்பற்றி அனுமதிக்க உள்ளனர். அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் கோயில் நுழைவாயிலில் இருந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலமே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also Read : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - கடற்கரை செல்ல தமிழக அரசு தடை
கோவில் வளாகத்தின் உட்புறப் பகுதியில் 117 சிசிடிவி கேமராக்களும் கோயில் வெளிப்புறப் பகுதியில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சொர்க்கவாசல் திருவிழாவிற்காக வரும் பக்தர்களின் தேவைக்காக காவல் உதவி மையம் 70 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது இதேபோன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வழிகாட்டுதலுக்காக 32 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு 14 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Also Read : தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாளை சொர்க்கவாசல் திறப்பு திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை என்பதால் ஸ்ரீரங்கம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srirangam