Home /News /tamil-nadu /

ஈழத்தமிழர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு..

ஈழத்தமிழர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு..

ஈழத்தமிழர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு..

ஈழத்தமிழர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு..

திருச்சி சிறப்பு முகாமில் 8 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டி, ஈழத்தமிழர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருச்சி சிறப்பு முகாமில் 8 ஆண்டுகளாக உள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், இலங்கை தமிழர்கள் 80 பேர் உட்பட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 115 பேர் உள்ளனர்.
இவர்கள், தங்களை உடனடியாக விடுதலைச் செய்ய வலியுறுத்தியும், குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வலியுறுத்தியும்  இலங்கைத் தமிழர்கள் பல்வேறு விதமான தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவர் கத்தியால் வயிறு மற்றும் கழுத்தை கீறிக் கொண்டும், ஒருவர் தூக்கு மாட்டியும், 16 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் தற்கொலைப்  போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read: இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல; அவர்களுக்கு நாம் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

உண்ணாவிரதம் தொடங்கி தற்கொலை முயற்சி வரை பல கட்ட போராட்டங்களை நடத்தினாலும், விடுதலைக்கான உத்தரவாதம் மட்டும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, 18ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போது, சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் (49) அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை சக முகாம்வாசிகள் தோளில் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றினர். முதலுதவிக்குப் பிறகு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற மகேந்திரன் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் உள்ளதாகவும் பொய் வழக்கில் கைது செய்து, வழக்கு முடிந்தும் விடுதலை செய்யாமல், குடும்பத்தினரோடு சேர்ந்து வாழவும் விடாமல் சிறப்பு முகாம் எனும் சிறையில் வைத்துள்ளதாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆகையால், விடுதலை அல்லது தற்கொலை என்கிற முடிவிற்கு வந்து விஷம் குடித்து விட்டதாத கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சிறப்பு முகாமில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், இலங்கை தமிழர் ஒருவர் திருச்சி சிறப்பு முகாமில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published:

Tags: Srilankan Refugees, Srilankan Tamil

அடுத்த செய்தி