• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இறந்த தாயின் உடலை வைத்து 7 நாள்கள் ஜெபம் செய்த சகோதரிகள்.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இறந்த தாயின் உடலை வைத்து 7 நாள்கள் ஜெபம் செய்த சகோதரிகள்.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இறந்துப்போன தங்களது தாய் உயிர்த்தெழுந்து வருவார் எனக் கூறி சகோதரிகள் போலீஸாருடம் வாக்குவாதம் செய்தனர்.

  • Share this:
    இறந்த தாயின் சடலத்தை வைத்து சகோதரிகள் ஜெபம் செய்த விவகாரம்  மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75). இவருக்கு ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தாய் மற்றும் இரண்டு மகள்கள் ஊருக்கு வெளியில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர்.  இவர்கள் வசிக்கும் வீடு ஊருக்கு வெளியில் இருந்ததால் ஊர் மக்களும் இவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளனர். வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் மூவரும் ஜெபம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆசிரியை மேரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேரியை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். மேரியை பார்க்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் மேரி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். அவரது இரண்டு மகள்களும் பைபிளை வாசித்த வாறு தாயை உயிர்பிப்பதாக கூறி செய்து வந்துள்ளனர். இதனைக்கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்தவர். மேரி இறந்துவிட்டார் அவரை நல்லடக்கம் செய்வோம் எனக் கூறியுள்ளார்.

    Also Read: உன் மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பவா?.. கணவனுக்கு போன் செய்த கால்டாக்ஸி டிரைவர் –அதிர்ச்சியில் உறைந்த பெண்

    இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த  சகோதரிகள் வீட்டுக்கு வந்த உறவினரை திட்டி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதனையடுத்து ஊர் மக்களிடம் சென்று விஷயத்தை தெரியப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மேரியின் வீட்டிற்கு விரைந்த காவலர்கள் விசாரணை செய்ய முற்பட்டுள்ளனர். சகோதரிகள் இருவரும் நீண்டநேரமாகியும் கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் கதவை திறந்துள்ளனர்.  காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மேரியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகளை போலீஸார் மேற்கொண்டனர். அப்போது சகோதரிகள் இருவரும் தாயார் உயிருடன் இருக்கிறார். அவரை எங்கும் எடுத்துச்செல்லக்கூடாது எனக் கூறி காவலர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  இதனையடுத்து மணப்பாறை தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Also Read: நண்பன் கொடுத்த ட்ரீட்.. தலைக்கேறிய போதையில் பெண்ணிடம் சில்மிஷம் – ஹோட்டலில் நடந்த அடிதடி சண்டை

    சம்பவ இடத்துக்கு மருத்துவமனை குழுவுடன் விரைந்த தாசில்தார் மேரியை பரிசோதனை செய்துள்ளனர். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது சகோதரிகள் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். மருத்துவமனையில் மேரியின் சடலத்தை ஆய்வு செய்த மருத்துவர் அவர் இறந்து ஒருவாரம் இருக்கலாம் எனக் கூறினார். மேரி எவ்வாறு இறந்தார் என்பது குறித்து அறிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தங்களது தாய் உயிருடன் இருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்து வருவார் எனக் கூறி வாக்குவாதம் செய்துவந்துள்ளனர்.  மூடநம்பிக்கையின் காரணமாக இறந்த தாயின் சடலத்தை வைத்து சகோதரிகள் ஜெபம் செய்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: