• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருச்சி பேராசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருச்சி பேராசிரியர் கைது

பேராசிரியர் பால் சந்திரமோகன்

பேராசிரியர் பால் சந்திரமோகன்

மூத்த பெண் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையிலான உள்விசாரணைக்குழு (விசாகா கமிட்டி)  விரிவான விசாரணை நடத்தி, 'மாணவிகளின் புகார் உண்மை' என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

  • Share this:
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருச்சி கல்லூரி பேராசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன், 'தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதுகலைப்பட்ட மாணவிகள் 5 பேர் கல்லுாரி முதல்வரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

'அவருக்கு, உதவி பேராசிரியர் நளினி என்பவர் உறுதுணையாக இருப்பதாகவும், இதன் காரணமாக கல்லுாரிக்கு வருவதற்கு அச்சமாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டிருந்தனர். அதையடுத்து, மூத்த பெண் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையிலான உள்விசாரணைக்குழு (விசாகா கமிட்டி)  விரிவான விசாரணை நடத்தி, 'மாணவிகளின் புகார் உண்மை' என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதையடுத்து, பேராசிரியர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி ஆகியோரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதற்கிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் உத்தரவின்பேரில், சமூக நல அலுவலர் தமீமுன் நிஷா, கல்லூரி மாணவிகளிடம் தனி விசாரணை மேற்கொண்டார்.
நடந்த சம்பவம் உண்மை என தெரிய வர, சமூக நல அலுவலர் தமிமூன் நிஷா, பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனடிப்படையில், பால் சந்திரமோகன் மீது,இந்திய தண்டனை சட்டம் 294 (b) 354 (A) ( D) 509, 109 மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5  பிரிவுகளின்  கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பால் சந்திரமோகனை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் பாலியல் புகாரால், கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: