• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்; தொடர்ந்து 2வது நாளாக மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்; தொடர்ந்து 2வது நாளாக மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

பிஷப் ஹீபர் கல்லூரி

பிஷப் ஹீபர் கல்லூரி

கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ள மாணவிகள் காவல்துறையில் தற்போது வரை புகார் அளிக்கவில்லை. தங்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கும் என்பதால், வெளிப்படையாக புகார் அளிக்கவும் அச்சப்படுகின்றனர்.

  • Share this:
திருச்சி மாநகரம் புத்தூரில் பிரபல தனியார் கலை, அறிவியல் தன்னாட்சி கல்லூரியான பிஷப் ஹீபர் உள்ளது. இக்கல்லூரியின் தமிழ்த்துறை மீது முதுகலைப் பட்ட மாணவிகள் 5  பேர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரனிடம் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தனர்.

அதில், தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர் பால் சந்திரமோகன்,  வகுப்பறையில் தங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு, காலால் சுரண்டுவது, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 'தமிழ்த்துறை பேராசிரியர் மாணவிகளைப்பார்த்து  ஆபாசமாக பேசினார். வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் வந்திருந்தால், அவர்களை தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். இதற்கு உதவிப் பேராசிரியை ஒருவரும் உடந்தையாக உள்ளார். இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இந்தப்புகாரின் அடிப்படையில், திருச்சியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஜெயந்திராணி, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய பாலியல் புகார்கள் குறித்த உள் விசாரணைக்குழு (விசாகா கமிட்டி) கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியது.

புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டனர். பேராசிரியர்கள் மீதான பாலியல் சீண்டல் என மாணவிகளின் புகார் உண்மையா..? பேராசிரியர்களுக்குள் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் தூண்டப்பட்ட புகாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் அறிக்கையை கல்லூரி முதல்வரிடம் அளித்துள்ளனர்.

இதையடுத்து,  குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவிப் பேராசிரியை நளினி ஆகியோரை கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Also read: கணவர் கொடுமைப்படுத்துகிறார்: நடவடிக்கை எடுக்காத போலீஸ் எஸ்.ஐ. மீது, சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்

மேலும், கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ள மாணவிகள் காவல்துறையில் தற்போது வரை புகார் அளிக்கவில்லை. தங்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கும் என்பதால், வெளிப்படையாக புகார் அளிக்கவும் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் குறித்து, விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுன்னிஷா தலைமையில் கல்லூரியில் நேற்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடமும் தொலைபேசியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து,  மாணவிகளின் பாலியல் புகார் குறித்து 2வது நாளாக சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிஷா தலைமையில், புகார் அளித்த மாணவிகள் மட்டுமின்றி வகுப்பு மாணவிகளிடம் தனியிடத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.
புகாரின் உண்மை தன்மையைப் பொருத்து சமூக நலத்துறை சார்பில் காவல் துறையில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: