• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய திமுக பிரமுகருக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்!

மணப்பாறை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய திமுக பிரமுகருக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்!

நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அரசியல் அழுத்தம் காரணமாக பிடிபட்ட சில மணிநேரத்திலேயே மணப்பாறை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டன.   

  • Share this:
    மணப்பாறை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திமுக பிரமுகருக்கு சொந்தமான வாகனங்கள் என்ற போதிலும்  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சம்பந்தப்பட்ட நிலத்தில் மணல் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன் மூன்று வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

    Also read: அடையாளம் தெரியவில்லையா? விமான பயணத்தில் ஆச்சர்யம் அளித்த நபர்.. நினைவில் நின்ற பயணம் என நெகிழ்ந்த தயாநிதி மாறன்!!

    இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திமுக பிரமுகருக்கு சொந்தமானவை (திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி) என தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அரசியல் அழுத்தம் காரணமாக பிடிபட்ட சில மணிநேரத்திலேயே மணப்பாறை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில் ஆளும் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என அறிவுறித்தியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்ட வாகனங்களை தேடிச் சென்று மணப்பாறை காவல்துறையினர் அந்த வண்டிகளை மீண்டும் பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Also read: அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர்.. பாதுகாப்பு வழங்கிய போலீசார்!

    தவறு செய்வது யாராக இருந்தாலும், அது திமுகவினர் என்றாலும் கூட அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதற்கு எடுத்துகாட்டாக, மணப்பாறையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான வாகனங்கள் அனுமதியின்றி மணல் அள்ளிய போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ராமன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: