சீமான் மீது அவதூறு பரப்பியவருக்கு மிரட்டல்... நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

நாம் தமிழர் கட்சியனர்

கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

  • Share this:
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்ததாக திருச்சி கே.கே.நகரில் உள்ள வாகன பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடப்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் யூடியுபர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் வினோத் என்பவர் நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிலையம் வைத்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு சென்ற யூடியுபர் சாட்டை துரைமுருகன், வினோத்,சந்தோஷ், சரவணன் உள்ளிட்டோர் கடையின் உரிமையாளர் வினோத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அவரும் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வினோத் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த  புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சாட்டை திருமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். மேலும் துரைமுருகனோடு கைது செய்யப்பட்டுள்ளதில் 4 பேரில் வினோத் என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
Published by:Vijay R
First published: