மிரட்டல் வழக்கில் ஜாமின் பெற்ற சாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது

சாட்டை துரைமுருகன்

திருச்சியில் மிரட்டல் வழக்கில் ஜாமின் பெற்ற சாட்டை துரைமுருகனை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத். இவர்   விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து வினோத்தின் கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்று சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் அவரை மிரட்டியதாக திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், யூ  ட்யூப்பர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் வினோத், சந்தோஷ், சரவணன்  ஆகியோர் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்,திருச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வருக்கும் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Also Read : மகளிர் சுய உதவிக் குழவினர் கடன் தொகைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் - சீமான்

அதே நேரத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி  அவதூறாக பேசியதாக கரூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி கொடுத்த புகாரில் கரூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் சாட்டை துரைமுருகன் மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி கே.கே.நகர் வழக்கைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசாராலும் ஏற்கனவே துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் மட்டும் துரைமுருகனுக்கு ஜாமின்  கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: