தஞ்சையில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நேற்று துவங்கிய வி.கே.
சசிகலா, இன்று காலை, குருபகவான் பரிகார ஸ்தலமான தஞ்சை திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
அதன்பின்னர், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். முன்னதாக, திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிடம் ஆசிப் பெற்றார்.
Also read : அதிமுகவில் மீண்டும் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் பதில்
இதை தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோயில், அக்கரைப்பட்டி சாய்பாபா கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில்களில் வழபாடு நடத்துகிறார். அவருடன், அமமுக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.