Home /News /tamil-nadu /

“பொறுத்திருந்து பாருங்க.. இங்கே தானே இருக்கேன்” - அரசியல் கேள்விக்கு சசிகலா அதிரடி பதில்

“பொறுத்திருந்து பாருங்க.. இங்கே தானே இருக்கேன்” - அரசியல் கேள்விக்கு சசிகலா அதிரடி பதில்

சசிகலா

சசிகலா

VK Sasikala : மும்மத வழிபாட்டுடன் சசிகலா 3ம் கட்ட ஆன்மீகப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி விமானநிலையத்தில், உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் ‘கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்’ என்று கூறிச்சென்றார்.

மேலும் படிக்கவும் ...
வி.கே.சசிகலா கடந்த மார்ச், 21ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி அன்று,  தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார். தொடர்ந்து, ஏப்ரல் 11ம் தேதி தனது, 2ம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் துவங்கினார்.

முதலில், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, முசிறி அருகே திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில்களில் ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார்.

சசிகலா  3ம் கட்ட ஆன்மிக பயணம்

இந்நிலையில், 3ம் கட்ட ஆன்மீகப் பயணத்தை இன்று துவங்கியுள்ளார். இதுகுறித்து சசிகலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அரசியல் சுற்றுப் பயணத்தை விரைவில் துவங்குவேன்” என்று சூளுரைத்தார். மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கை மேல்முறையீடு செய்வேன்” என்றும் கூறினார்.

Also Read: விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி

இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த சசிகலாவிடம், “தங்களது அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சிகளுடனா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள். நான் இங்கே தானே இருக்கேன்” என்றார்.

அடுத்ததாக, “உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் சொல்ல மறுத்தார். “கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

'சிக்கலை' தீர்க்கும் சிங்காரவேலன் கோயிலில் தரிசனம்

இந்நிலையில், திருச்சியில் இருந்து கார் மூலம், நாகை மாவட்டம் திருக்கடையூர் செல்லும் சசிகலா, அங்கு அமிர்தகடேசுவரர்-அபிராமியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

அடுத்ததாக, சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்கிறார். சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் எடுத்து கொடுத்த ஸ்தலம் சிக்கல். இங்கு வழிபாடு நடத்தினால் சிக்கல்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

மும்மத வழிபாடு

இரவு வேளாங்கண்ணியில் தங்கும் சசிகலா, மறுநாள் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். அதைத்தொடர்ந்து, நாகூர் ஆண்டவர் தர்காவில், சிறப்பு வழிபாடு செய்வதுடன் தனது, 3வது கட்ட ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

Must Read : பிரேக் என நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுனர் - சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்

3வது கட்டமாக மும்மத ஸ்தலங்களில் வழிபாடு நடத்தும் சசிகலா, அடுத்தகட்டமாக அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தீவிர அரசியல் பயணத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Suresh V
First published:

Tags: Sasikala, Tamil News, Trichy Airport

அடுத்த செய்தி