• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயிரைப் பணயம் வைத்து - காரில் தொற்றியபடி விரட்டிச் சென்று கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவலர்!

உயிரைப் பணயம் வைத்து - காரில் தொற்றியபடி விரட்டிச் சென்று கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவலர்!

உயிரைப் பணயம் வைத்து - காரில் தொற்றியபடி விரட்டிச் சென்று கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவலர்!

உயிரைப் பணயம் வைத்து - காரில் தொற்றியபடி விரட்டிச் சென்று கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவலர்!

சென்னை 4 வழிச் சாலையில் சென்னையை நோக்கி பறந்தது. அப்போது செந்தண்ணீர்புரம் பகுதியில் கார் சென்ற போது பைக்கில் விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், பைக்கில் இருந்து காரைப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.

  • Share this:
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா வைத்திருந்த 10க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரின் தீவிர சோதனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மன்னார்புரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது விமான நிலையம் பகுதியிலிருந்து முகமது ஹனீபா என்பவர் ஓட்டி வந்த காரை, சோதனையிட நிறுத்திய போது, கார் நிற்காமல் விரைந்து சென்றது. ஆனாலும், தனிப்படை போலீசாரும் விடாமல் விரட்டிச் சென்றனர். குறிப்பாக பைக்கிலும்  விரட்டிச் சென்றனர்.

நிற்காமல் சென்ற கார் மாநகருக்குள் நுழையாமல் சென்னை 4 வழிச் சாலையில் சென்னையை நோக்கி பறந்தது. அப்போது செந்தண்ணீர்புரம் பகுதியில் கார் சென்ற போது பைக்கில் விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், பைக்கில் இருந்து காரைப் பிடித்து நிறுத்தச் சொன்னார். ஆனாலும் கார் நிற்கவில்லை. பின்னர் காரில் தொற்றிய படியும் முன்பக்கத்தில் படுத்த படியும் சென்று, காரின் ஸ்டியரிங்கை திருப்பி, சாலையோர தடுப்பு சுவரில் மோத வைத்தார். இதையடுத்து கார் நின்றது.

Also read: பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

அப்போது காரின் முன்பக்கம் தொற்றிக் கொண்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் தூக்கி வீசப்பட்டார். பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார், சாமர்த்தியமாக காரை ஓட்டி வந்த முகமது ஹனீபாவை மடக்கிப் பிடித்தனர்.  காரிலிருந்து சுமார் 1.5 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

உயிரைப் பணயம் வைத்து காரை விரட்டிச்சென்ற தலைமைக் காவலர் சரவணன், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு  சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நலமுடன் உள்ள அவரை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: