Home /News /tamil-nadu /

‘அசானி’யால் ஆறுதல் மழை - திருச்சியில் குளிர்ச்சி!

‘அசானி’யால் ஆறுதல் மழை - திருச்சியில் குளிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy : திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 1 மணியளவில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு, இலங்கை சிங்கள மொழியில் 'அசானி' என்று பெயரிட்டுள்ளது. அசானி என்றால் தமிழில் 'பெருஞ்சினம்' என்று அர்த்தம். இந்த புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.ஆனாலும், இந்த புயலின் தாக்கத்தால், திருச்சி மாநகரத்தில் கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ஒருமணி நேரம் மட்டுமே இந்த மழை நீடித்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை, 6 மணி முதல், 7.30 மணி வரை தூறலும், சாரலுமாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான கத்திரி வெயிலில் திருச்சி மாவட்ட மக்கள் வறுப்பட்டு கொண்டிருந்தனர். நள்ளிரவு பெய்த திடீர் மழை மற்றும், இன்று காலை பெய்த தூறல் மழை காரணமாக நிலவி வரும் ரம்மியமான சீதோஷ்ண நிலையால் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தீவிர புயல் அசானி, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து, இன்று இரவு வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.

Must Read : உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவிக்கு கத்திக்குத்து - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புயலால், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Cyclone Asani, Rain, Trichy

அடுத்த செய்தி