ரயில்வே தொழிற் பழகுநர் இடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு: 90% தமிழ்நாட்டினருக்கு வாய்ப்பு

ரயில்வே அப்ரண்டீஸ்

அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தேர்வானவர்களில்  சற்றேறக்குறைய 90 சதவீத இடங்கள் தமிழ்நாட்டினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொழிற் பழகுநர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டினருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருச்சி, மதுரை கோட்டங்களில் ரயில்வே அப்ரண்டீஸ் பணியிடங்கு தேர்வாகியுள்ளோர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 90 சதவீத இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருச்சி, மதுரை கோட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் தொழிற் பழகுநர் (அப்ரண்டீஸ்) இடங்களுக்கு 2021ம் ஆண்டு தேர்வு பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மெக்கானிக்கல், வெல்டர், பிட்டர், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களில் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் 334 இடங்கள், திருச்சி கோட்டத்தில் 137, மதுரை கோட்டத்தில் 77 இடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வானவர்கள் மட்டுமின்றி காத்திருப்போர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பொன்மலை பணிமனைக்கு 46 பேர், திருச்சி கோட்டம் 3, மதுரை கோட்டத்தில் 6 பேர் என காத்திருப்போர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், அப்ரண்டீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளோர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை சான்று & ஆதார் எண், வங்கிக் கணக்கு விபரங்களுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்ரண்டீஸ்  நியமனங்கள் அந்தந்த மையங்களில் வரும் 4ம் தேதி முதல் நடைபெறுகிறது. இது குறித்த விபரம் தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறப்பு - தகவல்


அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தற்போது  தேர்வானவர்களில்  சற்றேறக்குறைய 90 சதவீத இடங்கள் தமிழ்நாட்டினருக்கும் 10 சதவீத இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொழிற் பழகுநர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டினருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு ரயில்வேயில் மொத்தமுள்ள 1765 இடங்களில் 1500 இடங்களுக்கு மேல் பிற மாநிலத்தவர்களே நியமனம் செய்யப்பட்டனர்.  இது தமிழ்நாட்டில்  பெரும் சர்ச்சையானது. ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டினர் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை நீயூஸ் 18 தமிழ்நாடு வெளிக் கொண்டு வந்து, பிரத்யேக செய்தியாக ஒளிபரப்பியது.

இதையும் படிங்க: மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்: ராமதாஸ் கண்டனம்


இதையடுத்து அரசியல் கட்சியினர், இளைஞர்கள் அமைப்புகள், ரயில்வே அப்ரண்டீஸ் முடித்தவர்களின் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.இதையடுத்து கடந்த ஆண்டிற்கான தென்னக ரயில்வே அப்ரண்டீஸ் இடங்களுக்கு தென் மாநிலத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு 90 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கலது நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றும் பணி நியமனத்திலும் இது தொடர வேண்டும் என்றும் பயிற்சி முடித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: