• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் இளங்கோவனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் ரெய்டு

திருச்சியில் இளங்கோவனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் ரெய்டு

திருச்சி எம்.ஐ.டி கல்லூரி

திருச்சி எம்.ஐ.டி கல்லூரி

திருச்சியில் உள்ள எம்.ஐ.டி (MIT) வேளாண் பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  • Share this:
தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்டம் முசிறியில் 4 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுகவின் முக்கிய பிரமுகருமான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இளங்கோவன். முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இவர்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் சென்றது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 27 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, திருச்சி மாவட்ட முசிறி வெள்ளாளப்பட்டியில்  உள்ள MIT வேளாண் பொறியியல் கல்லூரி, எம்ஐடி பாலிடெக்னிக்  கல்லூரிகள், ரேணுகாதேவி நகரில் உள்ள கல்லூரியின் செயலாளர் ஆதித்யா வீடு சுவாமி ஐயப்பன் அறகட்டளை அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார்   சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி.கள் ராஜு, மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் போலீசார் 30க்கும் மேற்பட்டோர்  இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, கரூர் லாலாபேட்டையில் உள்ள இளங்கோவின் சகோதரி இந்திராணி கலியபெருமாள் வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : வருவாயை விட 131% சொத்துக்குவிப்பு புகார் - மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு 

இந்த சோதனையில் அவரது சொத்து விபரங்களை சரி பார்ப்பதற்காக, வருவாய் துறையினரை அழைத்து வந்து, கணினி மூலம் சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: