திருச்சியில் தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

திருச்சியில் தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

திருச்சியில் தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டம்  சோமரசம்பேட்டை அருகே ரெட்டை வாய்க்காலில் உள்ள தனியார் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி (அமிர்தா வித்யாலயம்) கடந்த, 1ம் தேதி திறக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த, 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளன. அதையடுத்து, அந்த வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே அந்த மாணவியும், அவரது தாயாரும் எடுத்த  பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த பள்ளி நிர்வாகம், பள்ளியில் தூய்மைப்பணி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கு பரவாமல் தடுக்கவும், இன்று முதல் (6ம் தேதி), வெள்ளிக்கிழமை வரை, ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைத் தொடர்ந்து திருச்சியிலும் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: