Home /News /tamil-nadu /

ரேஷன் கடையில் மோடி படத்தை வைத்த பாஜகவினர்.. திமுகவினர் கால்வாயில் வீசியதால் பரபரப்பு

ரேஷன் கடையில் மோடி படத்தை வைத்த பாஜகவினர்.. திமுகவினர் கால்வாயில் வீசியதால் பரபரப்பு

கால்வாயில் வீசப்பட்ட மோடி புகைப்படம்

கால்வாயில் வீசப்பட்ட மோடி புகைப்படம்

PM Modi Photo | திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கடையில் பிரதமர் மோடி புகைப்படத்தை பாஜவினர் வைத்த நிலையில் அதை புகைப்படத்தை திமுகவினர் கால்வாயில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பெரிய மிளகுபாறை பொன்னகர் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியில் நியாய விலைக் கடை உள்ளது. இக்கடையில் விற்பனையாளராக சுகுமாரன் உள்ளார். இந்நிலையில், பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் வந்த பாஜகவினர் ரேஷன் கடையில் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களில் சிலர் மோடியின் படத்தை  உடைத்து சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர் இது குறித்து தகவலறிந்து அங்கு திரண்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து நியாய விலைக்கடை பூட்டப்பட்டது.

Also Read : 3 பல்பு கொண்ட ஓட்டு வீட்டுக்கு ரூ.25,000 மின்கட்டணம்.. மின் கணக்கீட்டாளர் மீது அதிரடி நடவடிக்கை..!

சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இரு தரப்பினரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதையடுத்து, அரைமணி நேரத்துக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த நியாய விலைக்கடை, போலீஸ் பாதுகாப்போடு திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவுகிறது.
Published by:Vijay R
First published:

Tags: BJP, DMK, PM Narendra Modi, Trichy

அடுத்த செய்தி