• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Trichy Power Shut Down | திருச்சியில் இன்று (19.06.2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Trichy Power Shut Down | திருச்சியில் இன்று (19.06.2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

புதுச்சேரி

புதுச்சேரி

திருச்சியில் பராமரிப்பு பணி காரணமாக 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் சிவலிங்கம் மற்றும் திருவெறும்பூர் உதவி செயற்பொறியாளர் நாராயணன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "
    திருச்சி அம்பிகாபுரம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் 19ம் தேதியான இன்று அம்பிகாபுரம் மெயின்ரோடு, கீழ அம்பிகாபுரம், இந்திரா நகர், காந்திஜி தெரு, இரயில் நகர், ஆண்டாள் நகர், இராஜப்பா நகர், ராயல் அவென்யூ, இராணுவ காலனி (7 முதல் 12-வரை உள்ள தெருக்கள்) ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    21-ம் தேதி காவேரி நகர், அண்ணா நகர், கோல்டன் நகர், ஸ்டார் நகர், தொழிற்பேட்டை, கணபதி நகர், சீனிவாச நகர், நேருஜி நகர், அம்மா குளம், கல்லாங்குத்து, காமராஜ் நகர், ஹரிணி நகர், எஸ். ஐ. டி, என் எஸ் பி அவென்யூ, சாரதா நகர், காந்தி தெரு, டேவிட் தெரு, அப்துல்கலாம் ஆசாத் தெரு, அப்துல்லா தெரு, ஜெகநாதபுரம், கல்யாணராமன் தெரு, ஸ்டாலின் தெரு, சந்தைப் பேட்டை மலை, தீப்பெட்டி கம்பெனி தெரு, சந்தோஷ் நகர், சக்தி நகர், எல். ஐ. சி நகர், அம்மன் நகர் மெயின் மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு, ராஜ் நகர், சிறீ ராம் நகர், ஆர். கே புரம், வெங்கடேஷ்வராநகர், விவேகானந்தர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...சென்னையில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் (19-06-2021)

    இதே போல் திருவெறும்பூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளில் 19 -ம் தேதியான இன்று சோழமாதேவி, சோழமாநகர், பிரகாஷ் நகர், வேங்கடராமன், குமரேசபுரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் ஆகிய பகுதிகளிலும், 21-ம் தேதி RSK நகர், பகவதிபுரம், காந்தி நகர், பாரதி புரம், கணேசன் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என அறிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: