Trichy Power Cut: திருச்சியில் இன்று (27-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம்(மாதிரிப் படம்)

திருச்சி மாவட்டத்தில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக கிழக்கு சட்டமன்ற தொகுதி, மேற்கு சட்டமன்ற தொகுதி, முசிறி , துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    திருச்சி மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் பகுதியில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் பூலோகநாதர் கோவில் தெரு, இபி ரோடு, வாழைக்காய் மண்டி, மீன் மார்க்கெட், காந்தி மார்க்கெட், மிளகாய் மண்டி, மணி மண்டபம் சாலை, கல்மந்தை, லஸ்கர் தெரு, பழ மார்கெட், எடத்தெரு, வளையல்கார தெரு, சின்ன தெரு, பெரிய கடை வீதி, தையல்காரர் தெரு, பெரிய சவுராஷ்டிரா தெரு, பாபு ரோடு ஆகிய பகுதிகளில் நாளை 27ஆம் தேதி மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கு பழைய உயர் அழுத்த மின் கம்பிகளை அதிக திறனுடைய புதிய கம்பிகளாக மாற்றும் பணிகள் நடப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 27ஆம் தேதியான இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், நவலூர் குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலங்குலதுபட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டி புதூர், சித்தாநத்தம், வடசேரி, கரையாம்பட்டி, இடையபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    இதேபோல முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று 27ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாத்தையங்கார்பேட்டை, பில்லா துறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாளி, பச்ச பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊர்கரை, கலிங்கப்பட்டி, வளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிபட்டி, முத்துராஜா பாளையம், லட்சுமனபுரம், பில்லா பாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், கோம்பை, பாதர்பேட்டை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9: 45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கண்ணனூர், மேல கொத்தம்பட்டி, தங்க நகர், பாலகிருஷ்ணன் பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கண்ணனூர், பாளையம், சின்னசேலம் பட்டி, வடக்குவெளி, பொண்ணு சங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், என் எஸ் புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, புதுபட்டி, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் நாளை 27ஆம் தேதி இன்று 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க... பாளை சிறையில் கைதி கொலை வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்

    மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், நெய்குலம், நம்பு குறிச்சி, சி ஆர் பாளையம், எம் ஆர் பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்குளம், ஊட்டத்தூர், பிகே அகரம், ரெட்டிமாங்குடி, கூத்தனூர் ,ஸ்ரீதேவி மங்களம், கொளக்குடி, கண்ணகுடி, பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: கதிரவன். திருச்சி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: