Home /News /tamil-nadu /

நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டல்... இன்ஸ்டாவில் காதல் வலை வீசி இளம் பெண்களை ஏமாற்றிய திருச்சி இளைஞர்

நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டல்... இன்ஸ்டாவில் காதல் வலை வீசி இளம் பெண்களை ஏமாற்றிய திருச்சி இளைஞர்

விஸ்வா

விஸ்வா

கடந்த, 4 ஆண்டுகளாக எந்த வேலை வெட்டியும் இல்லாமல் உல்லாசமாக வாழ்வதையே லட்சியமாக கொண்டிருந்த விஸ்வா தற்போது போலீசில் சிக்கியுள்ளார். 'நிர்வாணப் படத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டியே, அந்தப் பெண்ணிடம் இருந்து நகைகள், பணத்தை பறித்தது தெரிய வந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
இன்ஸ்டாகிராம் இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய திருச்சியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த கணவன், மனைவி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆண் மகனுக்கு வரன் பார்க்க முடிவெடுத்து, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண் வீட்டிற்கு செல்ல தேவையான நகைகளை எடுக்க அந்த ஆணின் தாயார் வீட்டு பீரோவை திறந்தபோது அதில் இருந்த, 25 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் மாயமாகி இருந்தது. சந்தேகத்தின் பேரில், தங்களது மகள், 19 வயதான கல்லூரி மாணவியை விசாரித்துள்ளனர். அந்த பெண் சொன்ன விஷயத்தை கேட்டு,  அக்குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கொரோனா காலக் கட்டத்தில் ஆன்லைன் படிப்பு என்பதால், புதிய மொபைல் போன் ஒன்றை அந்தப் கல்லூரி மாணவிக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர் பெற்றோர்.

படிப்போடு சேர்த்து, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்களிலும் அந்த மாணவி ஆக்டிவாக இருந்துள்ளார்.

அப்போது, திருச்சி தில்லைநகர் காசிப்பிள்ளைத் தெருவை சேர்ந்த, விஸ்வா (30) என்பவர் அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி உள்ளார்.

முதலில் நட்போடு துவங்கிய இருவரின் தொடர்பு, பின்பு காதலாகி உள்ளது. விஸ்வாவின் காதல் மொழிகளால் அந்த மாணவி, அவன் சொல்வதை எல்லாம் கேட்க தொடங்கியுள்ளார்.

ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் நிர்வாணப் படத்தை விஸ்வா கேட்க, அதையும் அனுப்பி வைத்திருக்கிறார் அந்த மாணவி. அதன் பிறகு, விஸ்வாவின் உண்மை முகம் தெரிய துவங்கியது.

'நிர்வாணப் படத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டியே, அந்தப் பெண்ணிடம் இருந்து நகைகள், பணத்தை பறித்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுக்க, திருச்சி கண்டோன்ட்மென்ட் குற்றப்பிரிவுக்கு புகார் வந்துள்ளது.

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாமளா தேவி, சப்- இன்ஸ்பெக்டர் உமா சங்கரி ஆகியோர், வீட்டில் இருந்த விஸ்வாவை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் கைப்பற்றினர்.

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (EEE) படித்துள்ளார் விஸ்வா என்றும் அவரது தந்தை ராஜவேலு உடல்நிலை சரியில்லாதவர். தாய் இல்லத்தரசி. ஒரே ஒரு தம்பி. படித்து முடித்துவிட்டு ஆறுமாத காலம் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பெண்களை காதலிப்பது- அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக வைத்துள்ளார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்த இரண்டு லேப்டாப்புகள், இரண்டு மொபைல் போன்கள் நிரம்பி வழியும் அளவுக்கு, ஆபாச படங்கள் இருந்துள்ளன.

அத்தனையும் விஸ்வாவின், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் சிக்கிய இளம் பெண்களுடன் விஸ்வா உல்லாசமாக இருக்கும் படங்கள்.

சென்னை பெண்ணிடம் பறிக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, இங்கு சிக்கும் பெண்களை, ஊட்டி, கொடைக்கானல் அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மறக்காமல் அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்போது, போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். இங்கே பணம் தேவைப்படும் போது, இந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளதும் தெரியவந்துளது.

Also read... அம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சம் மூன்றே நாட்களில் மீட்பு - போலீசார் துரித நடவடிக்கை...

25க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இவரிடம் கைப்பற்றியது, கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் அதிகமாக இவரிடம் ஏமாந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த, 4 ஆண்டுகளாக எந்த வேலை வெட்டியும் இல்லாமல் உல்லாசமாக வாழ்வதையே லட்சியமாக கொண்டிருந்த விஸ்வா தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாருக்காக காத்திருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cheating, Cyber crime, Instagram, Trichy

அடுத்த செய்தி