மதுரையை பூர்வீகமாக கொண்டவர் மருதுபாண்டி (45). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தினர் விருத்தாசலத்தில் இருக்க, மருதுபாண்டி மட்டும்
திருச்சியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இவர்,திருச்சி பொன்மலை டீசல் லோகோ ஷெட்டில், மெக்கானிக் ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த ஸ்டோருக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது கண் ஜாடை- கை ஜாடை காட்டுவதை மருதுபாண்டி வழக்கமாக வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், டீசல் ஷெட்டில் பணியாற்றும் ராஜாத்தி (38) என்ற பெண்ணிற்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து ராஜாத்தி கொடுத்த புகாரின்பேரின் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மருதுபாண்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Must Read : வனப்பகுதியை ஆக்கிரமித்து ஆசிரமம்.. சந்தனக் கட்டைகள் பறிமுதல்: சிக்கலில் நரபலி சாமியார்
மன்மதராசா
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பொன்மலை லோகோ ஷெட்டிற்கு பணிமாறுதலில் வந்த மருதுபாண்டி வேலையை தவிர 'மற்ற' வேலைகள் அனைத்தையும் சிறப்பாக பார்ப்பாராம். இவரது ‘துரத்தல்’ தொந்தரவுக்கு பயந்து, தற்காலிக பெண் பணியாளர்கள் சிலர் வேலையை விட்டே நின்றுவிட்டார்களாம். ‘பெண் என்றால் கூப்பிட தான் செய்வோம். இஷ்டம்னா வா.. கஷ்டம்னா விட்டுரு..’ இதுதான் முறைப்பு காட்டும் பெண்களிடம் மருதுபாண்டி பேசும் 'ரெகுலர்' வசனமாம்.
இதுபோன்று இங்கு வேலை பார்க்கும் அகிலா என்ற பெண்ணை துரத்திச் சென்று வசனம் பேசியதாக மருதுபாண்டி மீது ஏற்கனவே பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்களிடமும் தகராறு
மேலும், டீசல் லோகோ ஷெட்டில் பாதுகாப்புப் படை செக்யூரிட்டியாக பணியாற்றும் ஸ்ரீரங்கன் (வயது 60) என்பவரை கடந்த ஆண்டு ஓங்கி அறைந்துள்ளார். இதுகுறித்தும் மருதுபாண்டி மீது பொன்மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை இவர் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைவிட கொடுமை, அவர் பணியாற்றும் ரயில்வேயில் துறை சார்பாக ஒரு சிறு நடவடிக்கை கூட இல்லை என்பதுதான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.