Home /News /tamil-nadu /

பழமையான கோவிலில் 3 கலசங்கள் திருட்டு.. இரிடியம் கும்பல் கைவரிசை?

பழமையான கோவிலில் 3 கலசங்கள் திருட்டு.. இரிடியம் கும்பல் கைவரிசை?

3 கலசங்கள் திருட்டு

3 கலசங்கள் திருட்டு

Iridium | திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஎல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புரணமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
    மணப்பாறை அருகே பழமையான எல்லையம்மன் கோவிலில் 3 கலசங்கள் திருட்டுப்போன நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் பழமையான ஸ்ரீஎல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தினமும் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஒலிபெருக்கி இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் கோவிலில் ஒலி பெருக்கியை இயக்கச் சென்ற போது கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன 4 கலசங்களில் 3 கலசங்கள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் 3 கோபுர கலசங்களை திருடிச் சென்றருப்பதுடன் மற்றொரு கோபுர கலசத்தை உடைத்து எடுக்க முடியாததால் விட்டுச் சென்றதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Also read... சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சொந்த ஊரில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

    திருடப்பட்ட ஒரு கலசத்தின் மதிப்பு ரூ 5 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான கோவிலில் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இக்கோவிலில் முன் கோபுரத்தில் இருந்த 5 கலசங்களில் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேதமடைந்ததால் ஊர் பெரியவர்கள் எடுத்து பத்திரமாக வைத்துள்ளனர். இந்நிலையில் 4 கலசங்கள் இருந்த நிலையில் தற்போது 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது இரிடியம் கும்பலின் கைவரிசையாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    -செய்தியாளர்: ராமன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி