• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 12 மணிக்கு மேல் பிளாக்கில் விற்கப்படும் டாஸ்மாக் சரக்கு..

12 மணிக்கு மேல் பிளாக்கில் விற்கப்படும் டாஸ்மாக் சரக்கு..

திருச்சி டாஸ்மாக் கடை

திருச்சி டாஸ்மாக் கடை

முன் கூட்டியே மதுக்கடையைத் திறந்து, குறைந்த நேரமே விற்பனை இருந்தாலும் காலை 11 மணி வரை பெரும்பான்மை கடைகளில் கூட்டம் இல்லை.

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி, மளிகை, காய்கறி,  இறைச்சிக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்றும் நேரத்தை மாற்றி அமைத்தும் கடையை திறக்கும் நேரத்தைக்  குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் உள்ள 73  மதுபானக் கடைகளும் புற நகரில் உள்ள 113 மதுபானக் கடைகளளும் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. முன் கூட்டியே திறக்கப்பட்டாலும் காத்திருந்து சிலர் மது வாங்கிச் சென்றனர். முன் கூட்டியே மதுக்கடையைத் திறந்து, குறைந்த நேரமே விற்பனை இருந்தாலும் காலை 11 மணி வரை பெரும்பான்மை கடைகளில் கூட்டம் இல்லை.

கொரோனா பாதிப்பால் வேலையில்லை, வருவாய் இழப்பு,  பணப்புழக்கம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடி நோயாளிகள் பலர் 8 மணிக்கு முன்பே காத்திருந்து வாங்கிச் சென்று, கடை அருகிலேயே குடித்தனர்.

மேலும் படிக்க...  தாராபுரம் : கொள்ளையடிக்க போட்ட பிளான் சொதப்பல்... தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்

அதே நேரத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டதும் ₹ 120 க்கு விற்பனையாகும் குவாட்டர் பாட்டிலை ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே பகல் 12 மணிக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றும் மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: