• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை.. மக்களிடம் நல்ல வரவேற்பு.. அரசு சித்த மருத்துவ அலுவலர் தகவல்..

கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை.. மக்களிடம் நல்ல வரவேற்பு.. அரசு சித்த மருத்துவ அலுவலர் தகவல்..

அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் கொரொனாவிற்கான சிறப்பு சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள், லேகியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

  • Share this:
கொரோனா தொற்று  நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம், முசிறி, மணப்பாறை அரசு மருத்துவமனைகள்,  என்.ஐ.டி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம்,  உள்ளிட்ட இடங்களிலும் சிகிச்சைக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தனியாக கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 200 படுக்கை வசதி உள்ளது.

தற்போது  80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை (25ம் தேதி) 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் சித்தா கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகளான கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் காலை 6 மணிக்கு வழங்கப்படும்.

அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, 8 வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும். தொடர்ந்து, நோய் எதிர்ப்பாற்றல் தரும் ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம் , உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

தனி நபர் ஆவி பிடித்தல், மூலிகை பானம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கொரோனா பரிசோதனை முடிவு சான்று மற்றும் ஆவணங்களுடன் வருகை தரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை பெற மக்களிடம் அதிக வரவேற்புள்ளது.  தேவையற்ற அச்சம், மன அழுத்தத்தைப் தவிர்க்க வேண்டும் என்று அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் கொரொனாவிற்கான சிறப்பு சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள், லேகியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க... கொரோனா இல்லா கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் சிவகங்கை இளைஞர்கள்

மேலும் சித்த மருத்துவம் மட்டுமின்றி உடற்பயிற்சியும் தேவையற்ற அச்சத்தையும் மன அழுத்தத்தையும் போக்க கவுன்சிலிங்க் அளிக்கப்படுகிறது.  தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப நிலையில் வந்தால், 5 - 7 நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடலாம். கொரோனா சித்தா புத்துணர்வு மையத்திற்கு அனைத்து பரிசோதனையின் முடிவுகளுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சிகிச்சை மையம் மட்டுமல்ல புத்துணர்வு மையமாகவும் உள்ளது என்கிறார் டாக்டர் காமராஜ். பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துத்திற்கு தற்போது மக்களிடத்திலும் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.டி வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மைத்தில்  50 படுக்கைகள் சித்த மருத்துவப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: