Home /News /tamil-nadu /

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு வேட்பாளர் நன்றி தெரிவித்தார்.

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஸ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி் வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஸ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது.

    இதில் கடல்மணி என்ற கதிரவன் 424  வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கடல்மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் பூவாளூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான பி. குணசேகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

    இந்நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்  கதிரவன் கூறுகையில், மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பேன். அரசின் சலுகைகள் கிராமத்திற்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை கிடைக்கப்பெற்று அந்த பணியை செவ்வனே செய்வேன் என்று கூறினார்.

    Must Read : மதுராந்தகம் வாக்கு எண்ணும் மையத்தில் தூங்கும் அலுவலர்கள் : வேட்பாளர்கள் அதிர்ச்சி

    மேலும், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2021

    அடுத்த செய்தி