அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல என்பதை எதிர்கட்சி முதலில் உணர வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று வருந்தும் அளவில் இந்த அரசு செயல்படும் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

 • Share this:
  கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல என்பதை எதிர்கட்சி முதலில் உணர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தூர்வாருதல் பணியை தொடங்கி வைத்த பின்னர் முன்களப்பணியாளர்களுக்கு காய்கனி, மளிகை பொருட்களை வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, சென்னை பள்ளி விவகாரத்தில் முதல்வர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் அதன்பின்னர் முதல்வரின் நடவடிக்கை எப்படி இருக்கின்றது என்பதை அனைவரும் பார்ப்பீர்கள் என்று கூறினார்.

  கொரோனா தொடர்பான பணிகளில் எதிர்கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்… வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று வருந்தும் அளவில் இந்த அரசு செயல்படும் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல என்பதை முதலில் எதிர்கட்சி உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். இதே போல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றாலும் கூட முதலில் மாணவ, மாணவிகளின் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு குறித்து இந்த அரசு அடுத்தடுத்த ஆலோசனைகளை நடத்தி வருகின்றது என்று கூறினார்.

  செய்தியாளர் - ராமன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: