• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆரோக்கிய ராஜீவ் ஸ்டேண்ட்.. ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரனின் பெயர்

ஆரோக்கிய ராஜீவ் ஸ்டேண்ட்.. ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரனின் பெயர்

ஆரோக்கிய ராஜீவ்

ஆரோக்கிய ராஜீவ்

எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என ஆரோக்கிய ராஜீவ் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

  • Share this:
தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் பெயர் ஊட்டி வெலிங்டன் ராணுவ மைதானத்தின் ஒரு பகுதிக்கு  சூட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜீவ். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் தடகள வீரர். அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக், இதற்கு முந்தைய ரியோ ஒலிம்பிக் என தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் 400×4 தொடர் ஓட்டத்தில் பங்கேற்றார். கடந்த 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், தொடர்ந்து 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவில்லை என்றாலும்  முகமது அனஸ் யஹியா, நோ நிர்மல் டாம், ஆரோக்கியராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகிய வீரர்கள் இடம் பெற்ற இந்திய ஆண்கள்  அணி 4*400 தொடர் ஓட்டத்தில் குறைந்த நிமிடங்களில் (3:00:25) பந்தய தூரத்தைக் கடந்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். ஆரோக்கிய ராஜுவ் ஊட்டி வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்டில்  சுபேதாராக உள்ளார். ஆசிய அளவில் பதக்கம் உலகளவில் முத்திரை பதித்துள்ள  ஆரோக்கியராஜீவ், தற்போதும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Also Read: “இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது”... மீண்டும் அதிமுகவில் நுழையும் சசிகலா

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் பங்கேற்ற பின்னர் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இப்போது, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு  இந்திய ராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வகையில்,மெட்ராஸ் ரெஜிமெண்ட் வளாகத்தின் ராணுவ (தங்கராஜ்) மைதானத்தில்  பார்வையாளர்கள் அமரும் ஒரு பகுதிக்கு  ஆரோக்கியராஜீவ் பெயரைச் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது இந்திய ராணுவம். அவர் பயிற்சி பெற்ற, தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆரோக்கிய ராஜீவ்


ஆரோக்கியராஜீவ், பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே பெரியளவில் சாதிக்க முடியும் என்று தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஆரோக்கியராஜீவ் கூறுகையில்,இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இந்த உற்சாகம், ஊக்கம் என்னை இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்யும். நிச்சயம் இன்னும் பல சாதனைகளைச் செய்வேன்  என்கிறார் உற்சாகம் பொங்க.

Also Read: மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய காதல் ரோமியோ.. சமாதானம் பேச அழைத்து வெளுத்தெடுத்த சிங்கப்பெண்

மேலும், ஏற்கனவே வெலிங்டன் ராணுவ ரெஜிமெண்டில் பணிபுரிந்த, அர்ஜூனா விருது பெற்ற கால்பந்து வீரர்  தங்கராசுவின்  பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்பு. தேசிய, சர்வதேச போட்டிகளில் தடம் பதித்து வரும் தடகள வீரருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் விளையாட்டு வீரர்களை உற்காசப்படுத்தியுள்ளது. திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் இளம் வீரர்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: